பாகுபலி தி எபிக் படக்குழு வெளியிட்ட புது அப்டேட் – வைரலாகு எக்ஸ் போஸ்ட்
Baahubali The Epic: நடிகர் பிரபாஸ் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியாகி உலக அளவில் உள்ள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் பாகுபலி பாகம் ஒன்று மற்றும் இரண்டு. இந்தப் படங்கள் இரண்டையும் இணைத்து ஒரே படமாக வெளியிட படக்குழு தற்போது முடிவு செய்துள்ளது.

பாகுபலி தி எபிக்
நடிகர் பிரபாஸ் (Actor Prabhas) நாயகனாக நடித்து உலக அளவில் உள்ள ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பைப் பெற்றது பாகுபலி தி பிகினிங்ஸ். இந்தப் படத்தை இயக்குநர் ராஜமௌலி (Director Rajamouli) எழுதி இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் உலக அளவில் தெலுங்கு சினிமாவை இந்தப் படம் பிரபலப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியான போதே இரண்டாம் பாகத்தினை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஏன் என்றால் முதல் பாக க்ளைமேக்ஸ் அப்படி இருக்கும். ஏன் என்ற கேள்வியுடன் பாகுபலி படத்தின் முதல் பாக க்ளைமேக்ஸ் முடிந்ததால் அதனின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து பாகுபலி படத்தின் இரண்டாம் பாகமான தி கன்குளூஷன் கடந்த 2017-ம் ஆண்டு திரையரக்குகளில் வெளியானது. முதல் பாகத்தின் முரட்டு ட்விஸ்ட்டால் இரண்டாம் பாகத்தைப் பார்க்க திரையரங்குகளில் முண்டியடுத்துக்கொண்டு சென்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் அமைந்ததால் ரசிகர்கள் அதனை கொண்டாடித் தீர்த்தனர். இந்த நிலையில் இந்த படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடந்த நிலையில் இரண்டு பாகங்களையும் இணைத்து ஒரே படமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
பாகுபலி தி எபிக் படக்குழு வெளியிட்ட புது அப்டேட்:
இந்த நிலையில் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் இணைத்து பாகுபலி தி எபிக் என்ற பெயரில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதில் பல காட்சிகள் இரண்டு பாகங்களிலும் வராதது இருக்கும் என்று இயக்குநர் ராஜமௌலி முன்னதாக பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தை ஐமேக்ஸ், டால்பி மற்றும் டிபாக்ஸ், 4டிஎக்ஸ் வடிவில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தற்போது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read… உன் கைய உடைச்சாலும், கால உடைச்சாலும் நீ ஓடிகிட்டே இரு – பைசன் காளமாடன் ட்ரெய்லர் இதோ
பாகுபலி தி எபிக் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Relive The Epic all over again – this time on the grandest cinematic formats, more immersive than ever! #BaahubaliTheEpic releasing in all Premium Large Formats across the globe!#BaahubaliTheEpicOn31stOct pic.twitter.com/4SHgpi8bpC
— Baahubali (@BaahubaliMovie) October 14, 2025