பாகுபலி படத்தின் 2 பாகங்களையும் இணைந்து ரீ ரிலீஸில் ஒரே படமாக வெளியிட திட்டம்

Baahubali Movie: தென்னிந்திய சினிமாவை உலக அளவிற்கு பிரபலம் ஆக்கிய படங்களில் முக்கிய பங்கு வகிப்பது பாகுபலி. இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாகுபலி படம் வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவடைய உள்ள நிலையில் படத்தின் ரீ ரிலீஸ் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பாகுபலி படத்தின் 2 பாகங்களையும் இணைந்து ரீ ரிலீஸில் ஒரே படமாக வெளியிட திட்டம்

பாகுபலி

Published: 

08 Jun 2025 13:15 PM

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு 10-ம் தேதி ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியான படம் பாகுபலி தி பிகினிங்ஸ். இந்தப் படத்தில் நடிகர் பிரபாஸ் நாயகனாக நடித்து இருந்தார். இவருக்கு நாயகியாக நடிகை அனுஷ்கா ஷெட்டி நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராணா டகுபதி, தமன்னா பாட்டியா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர், ரோஹினி, தனிகெல்லா பரணி, ஜான் கொக்கேன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எம்.கீராவாணி இசையமைத்து இருந்த நிலையில் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆர்க் மீடியா ஒர்க்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் ஷோபு யர்லகத்தா. பிரசாத் தேவிநேனி இணைந்து இந்தப் படத்தை தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி படத்தின் கதை என்ன:

பாகுபலி படத்தை அரசனை யாருக்கு என்பதை மையகாக வைத்து உருவாக்கப்பட்டது. இதில் நடிகர் பிரபாஸ் இரட்டை வேடங்களில் நடித்து இருந்தார். அப்பா மகன் என்ற இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்து இருந்தார். இதில் அப்பா கதாப்பாத்திரத்திற்கு நடிகை அனுஷ்கா ஷெட்டி ஜோடியாகவும் மகன் கதாப்பாத்திரத்திற்கு தமன்னா நாயகியாகவும் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகை ரம்யா கிருஷ்ணன் ராஜமாதாவாகவும் நடிகர் நாசர் ரம்யா கிருஷ்ணனின் கணவராக நடித்து இருந்தார். மேலும் ராணா டகுபதி ரம்யா கிருஷ்ணனின் மகனாக படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் சத்யராஜ் படைத் தளபதியாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்பா பிரபாஸை முதல் பாக இறுதியில் நடிகர் சத்யராஜ் கொலை செய்துவிடுகிறார். இவர் ஏன் அவரை கொலை செய்தார் என்பதே பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தின் கதை ஆகும். இந்த க்ளைமேக்ஸ் காட்சி இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி படத்தின் இரண்டாம் பாகம் 2017-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

பாகுபலி படத்தின் ரீ ரிலீஸ்:

இந்த பாகுபலி படம் வெளியாகி அடுத்த மாதத்துடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. இதனை கொண்டாடும் விதமாக பாகுபலி படத்தை ரீ ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை முன்னதாகவே வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து ஒரே படமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி படத்தை அக்டோபர் மாதம் ரீ ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories
காமெடி படத்தில் இத்தனை ட்விஸ்டா? அமேசான் ப்ரைம் வீடியோவில் இருக்கும் இந்த மதுர மனோகர மோஹம் படத்தை கண்டிப்பா பாருங்க!
ஜோதிகா மற்றும் கார்த்தி இல்லாமல் சூர்யா இன்ஸ்டாவில் ஃபாலோ பண்ணும் அந்த ஒரே ஒரு தமிழ் நடிகர்… யார் தெரியுமா?
பிளாக் மெயில் முதல் சரண்டர் வரை… இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
இனி ஃபேமிலி செண்டிமெண்ட்லாம் ஹிட்டடிக்கதுனு நீ சினிமாவை விட்டு போ சொன்னாங்க – இயக்குநர் பாண்டிராஜ் பேச்சு!
பண மோசடி வழக்கில் பிரபல காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
தூக்கமில்லாமல் கஷ்டப்பட்டேன்…. ‘கிங்டம்’ பட நிகழ்வில் விஜய் தேவரகொண்டா உருக்கம்!