உங்ககூட சேர்ந்து போராட்டம் மட்டும் பண்ணனும்… ஆனா உங்களுக்கு போட்டியா வந்துட கூடாதுல – வெளியானது தினேஷின் கருப்பு பல்சர் படத்தின் ட்ரெய்லர்!
Karuppu Pulsar Movie Trailer | தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் அட்டக்கத்தி தினேஷ். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்ற நிலையில் தற்போது கருப்பு பல்சர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

கருப்பு பல்சர்
தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான ஈ படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் தினேஷ். இதனைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு வரை எவனோ ஒருவன், ஆடுகளம், மௌன குறு ஆகியப் படங்களில் சிறிய வேடத்தில் நடித்து வந்த நடிகர் தினேஷ் கடந்த 2012-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் இவர் நாயகனாக அறிமுகம் ஆனதைத் தொடர்ந்து இவரை ரசிகர்கள் அட்டக்கத்தி தினேஷ் என்று அழைக்கத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து நடிகர் அட்டக்கத்தி தினேஷ் நடிக்கும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. குறிப்பாக 2024-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து அட்டக்கத்தி தினேஷின் நடிப்பில் வெளியான படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
தொடர்ந்து நடிகர் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தண்டகாரண்யம். இதில் அவர் நாயகனாக நடிக்கவில்லை என்றாலும் இவரது கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நடிகர் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் இவரது நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கருப்பு பல்சர்.
வெளியானது தினேஷின் கருப்பு பல்சர் படத்தின் ட்ரெய்லர்:
கருப்பு பல்சர் என்ற படத்தில் நடிகர் தினேஷ் நாயகனாக நடித்து உள்ள நிலையில் இயக்குநர் முரளி கிருஷ் இயக்கி உள்ளார். இதில் நடிகர் தினேஷ் உடன் இணைந்து நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமாக இந்தப் படம் உருவாகி உள்ளது. இந்தப் படம் வருகின்ற 30-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… புதிய உச்சத்தை தொட்டது கோல்டன் ஸ்பாரோ பாடல்… நீக் படக்குழு வெளியிட்ட பதிவு
நடிகர் ஜீவா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Super happy to release the trailer of #KaruppuPulsar starring @dineshofficial , directed by Murali Krish! My best wishes to the entire team! ❤️
Trailer 🔗 https://t.co/pNCkfE8cFh
Produced by #YashoEntertainment #blacksheepmusic
@vr_dinesh_gethu @baskararumugam…
— Jiiva (@JiivaOfficial) January 26, 2026
Also Read… விறுவிறுப்பாக நடைபெறும் அட்லி – அல்லு அர்ஜுன் படத்தின் ஷூட்டிங்… வெளியானது புது தகவல்