Ashwath Marimuthu: என்னிடம் விஜய் சாருக்காகவே ஸ்பெஷல் கதை இருக்கு.. ஆனால் – அஷ்வத் மாரிமுத்து ஓபன் டாக்!
Ashwath Marimuthu Reveals Special Vijay Script: அஷ்வத் மாரிமுத்து, சிலம்பரசனுடன் STR51 படத்தில் இணையவுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், தளபதி விஜய்க்காகவே ஸ்பெஷல் கதை வைத்திருப்பதாகவும், அவரை முதல் முதலில் பார்த்த தருணம் குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் மற்றும் அஷ்வத் மாரிமுத்து
கோலிவுட் சினிமாவில் கடந்த 2020ம் ஆண்டில் வெளியான ஓ மை கடவுளே (oh My Kadavule) என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்தவர் அஷ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu). இந்த படமானது வெளியாகி மக்கள் மத்தியில் இவருக்கு எதிர்பாராத பிரபலத்தை கொடுத்திருந்தது. இதில் அசோக் செல்வன், வாணி போஜன் மற்றும் ரித்திகா சிங் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பின் இவரின் இயக்கத்தில் வெளியான படம்தான் டிராகன் (Dragon). இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan), அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோஹர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது மீண்டும் இவருக்கு தமிழில் ஒரு நல்ல வரவேற்பை கொடுத்தது. 2025ம் ஆண்டில் கிட்டத்தட்ட ரூ 150 கோடிகளுக்கு மேல் வசூலை கொடுத்து சிறப்பான வெற்றி திரைப்படமாக அமைந்திருந்தது. இதையடுத்து அவர் சிலம்பரசன் (Silambarasan) கூட்டணியில் புது படத்தில் இணைவதாக அறிவித்திருந்தார்.
அந்த படமானது தற்காலிகமாக STR51 என அழைக்கப்பட்டுவரும் நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது. அந்த விதத்தில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் அஷ்வத் மாரிமுத்து பேசியுள்ளார். அதில் அவர், தளபதி விஜய்க்காக (Thalapathy Vijay) பிரத்யோக கதை ஒன்றை எழுதிவைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவரை முதல் முதலில் சந்தித்த தருணம் குறித்தும் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: ரியோ ராஜின் 7வது படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடக்கம் – டைட்டில் என்ன தெரியுமா?
தளபதி விஜய்க்காக கதை வைத்திருப்பது குறித்து அஷ்வத் மாரிமுத்து சொன்ன விஷயம்:
அந்த நேர்காணலில் அஷ்வத் மாரிமுத்து பேசுகையில், “நான் தளபதி விஜய் சாருக்காகவே பிரதியோட பிரம்மாண்ட கதை ஒன்றை எழுதிவைத்திருக்கிறேன். டிராகன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, நான், பிரதீப், அர்ச்சனா மேடம் எல்லாருமே விஜய் சாறை நேரில் சந்தித்திருந்தோம். அப்போது விஜய் சாய் அர்ச்சனா மேமிடம், “இவன்தான் நமக்கு சரியான ஆளு. எப்படி விட்டிங்க, இவன ஏன் கூட்டிட்டு வரல” என்று கேட்டிருந்தார்.
இதையும் படிங்க: ரஜினிகாந்தின் அந்த படத்திற்கு நான் தான் முதலில் பேசப்பட்டேன் – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து
எனக்கு விஜய் சாருடன் பணியாற்றவேண்டும் என்பது பெரிய கனவு. ஆனால் இப்போது அவர் அரசியல் சென்றுவிட்டார். நான் பொதுவாக உணர்ச்சிவசப்படமாட்டேன், ஆனால் டிராகன் பட வெற்றியை அடுத்து விஜய் சாரை நேரில் சந்தித்ததும், எனக்கே தெரியாமல் தானாகவே அழுதுவிட்டேன்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.
டிராகன் பட வெற்றியின்போது விஜய்யை நேரில் சந்தித்தது பற்றி அஷ்வத் மாரிமுத்து வெளியிட்ட பதிவு:
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தற்போது STR51 படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகளில் இருக்கிறார். இப்படத்தின் கதை வேலைகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில், வசனம் தொடர்பான வேலைகள் நடக்கிறதாம். அரசன் பட ஷூட்டிங்கை முடித்ததும் சிலம்பரசன் உடனே இப்படத்தில் இணைகிறாராம். இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமாக தயாராகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.