தனுஷின் இட்லி கடை – வாழ்த்து தெரிவித்த ரெட்ட தல படக்குழு!

Retta Thala Movie team congratulates Idli Kadai Movie: தனுஷின் நடிப்பிலும் மற்றும் இயக்கத்திலும் வெளியாக காத்திருக்கும் படம்தான் இட்லி கடை. இந்த படமானது வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்து, அருண் விஜய்யின் ரெட்ட தல படக்குழு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது பற்றி பார்க்கலாம்.

தனுஷின் இட்லி கடை -  வாழ்த்து தெரிவித்த ரெட்ட தல படக்குழு!

தனுஷின் இட்லி கடை படம்

Published: 

25 Sep 2025 22:28 PM

 IST

நடிகர் தனுஷ் (Dhanush) வெறும் நடிகராக மட்டுமில்லாமல்,  தயாரிப்பாளர், இயக்குநர், கதாசிரியர் மற்றும் பாடகர் என பல்வேறு பணிகளை செய்து வருகிறார். அந்த வகையில், இவரின் இயக்கத்தில் 4வது உருவாகியிருக்கும் படம்தான் இட்லி கடை (Idli Kadai). இந்த படத்தில் நடிகர் தனுஷ் முன்னணி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக இரு நடிகைகள் நடித்துள்ளனர். இதில் முன்னணி கதாநாயகியாக நடிகை நித்யா மேனன் (Nithya Menen) மற்றும் ஷாலினி பாண்டே (Shalini Pandey) இணைந்து நடித்துள்ளனர். மேலும் அருண் விஜய் (Arun Vijay) இப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது.

ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையமைப்பில் தயாராகியிருக்கும் இப்படமானது வரும் 2025 அக்டோபர் 1ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தனுஷின் இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்து அருண் விஜயின் “ரெட்ட தல” (Retta Thala) படக்குழு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : எனது சாதனையை முறியடித்துவிட்டீர்கள்.. தேசிய விருதை வென்ற திரிஷா தோஷரை வாழ்த்திய கமல்ஹாசன்!

தனுஷின் இட்லி கடை படத்தை வாழ்த்தி ரெட்ட தல படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

அருண் விஜய் மற்றும் தனுஷ் கூட்டணி

நடிகர் அருண் விஜய் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவான முதல் படம்தான் இட்லி கடை. இந்த படத்தில் அருண் விஜய் நெகடிவ் ரோலில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு முன் அருண் விஜய் நடித்து வந்த படம்தான் ரெட்ட தல. இந்த படத்தை இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கியுள்ளார். அதிரடி ஆக்ஷ்ன் திரில்லர் கதைக்களத்தில் இந்த படமானது உருவாகியுள்ளது.

இதையும் படிங்க : சக்தித் திருமகன் படம் அந்த ஹீரோ பண்ணிருக்கவேண்டியது.. இயக்குநர் அருண் பிரபு சொன்ன நடிகர் யார் தெரியுமா?

இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இந்நிலையில், ரெட்ட தல படத்தின் முதல் பாடலான “கண்ணம்மா” என்ற பாடலை நடிகர் தனுஷ்தான் பாடியுள்ளார். இப்படமானது சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரெட்ட தல படத்தின் முதல் பாடலை பாடிய தனுஷ்

அருண் விஜய்யும் தனுஷின் இட்லி கடை படத்தில்  நடித்திருந்த நிலையில், அதற்கு கைமாறாக தனுஷ் ரெட்ட தல படத்தின் முதல் பாடலை பாடியிருந்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த ரெட்ட தல படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் போன்றவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அந்த வகையில் இன்னும் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிடவில்லை. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.