டிமான்டி காலனி 3 திரைப்படம்.. சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

Demonte Colony 3 Movie: தமிழில் நடிகர் அருள்நிதியின் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான திரில்லர் திரைப்படம்தான் டிமான்டி காலனி. கடந்த 2024ம் ஆண்டில் வெளியான பாகம் 2 படம் சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், பாகம் 3 தயாராகியுள்ளது. தற்போது இது குறித்த சூப்பர் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

டிமான்டி காலனி 3 திரைப்படம்.. சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

டிமான்டி காலனி 3 திரைப்படம்

Updated On: 

16 Mar 2026 15:39 PM

 IST

கோலிவுட் சினிமாவில் பல ஹாரர் திரைப்படங்கள் வெளியாகிவருவது வழக்கமே. காமெடி மற்றும் ஹாரர் திரைப்படங்கள் என்ற நமது நினைவிற்கு வருவது சுந்தர் சி (Sundar C). அதுபோல வித்தியாசமான ஹாரர் திரில்லர் திரைப்படங்களை கொடுத்து சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் இயக்குநர் அஜய் ஞானமுத்து (Ajay Gnanamuthu). இவரின் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டில் டிமான்டி காலனி (Demonte Colony 1) படமானது வெளியானது. வெளியான ஆரம்பத்தில் இப்படம் வரவேற்பை பெறாவிட்டாலும், போக போக வரவேற்பை பெற்று பெரிதாக பேசப்பட்டுவந்தது. அதையடுத்து கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பின், 2024ம் ஆண்டில் வெளியான படம்தான் டிமான்டி காலனி 2 (Demonte Colony) . இதில் அருள்நிதி (Arulnithi), பிரியா பவனி ஷங்கர் (Priya Bhavani Shankar) , மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

இப்படமானது சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இதன் பாகம் 3 தயாராகியுள்ளது. இதன் முதல் பார்வைகள் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இதன் முதல் புரோமோ வீடியோ எப்போது வெளியாகும் என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 2026 மார்ச் 17ம் தேதி மாலை 5 :01 மணியளவில் இதன் புரோமோ வீடியோ வெளியாகுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: நான் பார்த்ததிலேயே மிகவும் எதார்த்தமான, இயல்பான நடிகர் ரஜினிகாந்த் – நடிகர் வசந்த் ரவி

டிமான்டி காலனி 3 திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட அப்டேட் பதிவு:

டிமான்டி காலனி 2 திரைப்படத்தின் முடிவில், அந்த லைபிரேரியனை மையமாக கொண்டு முடிக்கப்பட்ட நிலையில், அந்த லைபிரேரியன் யார் என பலருக்கும் சந்தேகங்கள் இருந்தது. அந்த வகையில் டிமான்டி காலனி 3 படத்தில் அந்த லைபிரேரியனின் அறிமுக வீடியோ, 2026 மார்ச் 17ம் தேதி மலை 5:01 மணியளவில் வெளியாகிறதாம். இது தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.

டிமான்டி காலனி 3 படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும் :

அருள்நிதியின் டிமான்டி காலனி 3 படத்தின் ஷூட்டிங் நிறுவடைந்ததாக கூறப்படும் நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக இருக்கிறது. இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்க, பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. மேலும் இதற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை சோபனா?

இது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் நிலையில், இதன் ரிலீஸ் எப்போது இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதன்படி இது வரும் 2026 ஆண்டு மே மாதத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பட வேலைகள் விரைவில் முடிவடைந்தால் ஏப்ரல் மாதத்தில் தேர்தலுக்கு முன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
100 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் அரசுக்கு வழங்கிய கடனை திருப்பி கேட்கும் இந்திய குடும்பம்
பிறந்த குழந்தையை கையில் வாங்கும்போது உணர்ச்சிவசப்பட்ட தந்தை - வைரலாகும் வீடியோ
காமிகாஸ் டிரோன் படகுகளை பயன்படுத்தி எண்ணெய் கப்பல்களை தாக்கும் ஈரான்
பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்ததால் சரச்சை - சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் எக்ஸ் பக்கம் முடக்கம்