Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ghaati : விக்ரம் பிரபு – அனுஷ்காவின் ‘காதி’ படத்தின் ரிலீஸ் எப்போது.. வெளியான அறிவிப்பு!

Ghaati Movie Release Date Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர்தான் விக்ரம் பிரபு. இவர் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படம் காதி. நடிகை அனுஷ்கா ஷெட்டியின் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ளது. இப்படம் இறுதிக்கட்ட வேலையில் இருந்துவரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

Ghaati : விக்ரம் பிரபு – அனுஷ்காவின் ‘காதி’ படத்தின் ரிலீஸ் எப்போது.. வெளியான அறிவிப்பு!
காதி திரைப்படம்Image Source: Social Media
barath-murugan
Barath Murugan | Published: 02 Jun 2025 17:23 PM

தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் புகழ் பெற்ற நடிகையாக இருந்து வருபவர் அனுஷ்கா ஷெட்டி (Anushka Shetty). இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான படம் மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி (Miss Shetty Mr Polishetty)  திரைப்படம், தெலுங்கு மொழியில் கடந்த 2023ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் ரிலீஸை தொடர்ந்து நடிகை அனுஷ்கா ஷெட்டியின் முன்னணி நடிப்பில் அடுத்ததாக உருவாகிவந்த திரைப்படம்தான் காதி (Ghaati). இந்த படத்தை இயக்குநர் கிரிஷ் ஜாகர்லமுடி (Krish Jagarlamudi) இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், நடிகை அனுஷ்காவிற்கு ஜோடியாகத் தமிழ் பிரபல நடிகர் விக்ரம் பிரபு (Vikram Prabhu) நடித்துள்ளார். இவர் இந்த படத்தின் மூலம் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த, 2024ம் ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்தது. மேலும் இப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ நடிகை அனுஷ்காவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த படத்தில் அனுஷ்கா ஷெட்டி அதிரடி நாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படியாக, இந்த காதி படமானது வரும் 2025, ஜூலை 11ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதி திரைப்பட குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :

 

இந்த படத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டிதான் ஆரம்பத்தில் நடிக்கவுள்ளதாகப் படக்குழு அறிவித்திருந்தது. அதை தொடர்ந்து, அவருக்கு ஜோடியாகத் தமிழ் பிரபல நடிகர் விக்ரம் பிரபு இணைந்தார். இந்த படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கில் முன்னணி நாயகனாக அறிமுகமாகியுள்ளார். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அது தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் பிரம்மாண்டமாக நடந்துவந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் 2025, ஜூலை 11ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. தெலுங்கு மொழியில் அடிப்படியாக உருவான இப்படம், தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது

இந்த படத்தில் அனுஷ்கா ஷெட்டி மற்றும் விக்ரம் பிரபுவுடன், நடிகர்கள் ரம்யா கிருஷ்ணன், சைதன்யா ராவ் மடாடி, ஜகபதி பாபு, ஜான் விஜய் உட்படப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் விக்ரம் பிரபு தேசி ராஜு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுபானத்துக்காக மகனை அடித்து கொன்ற தந்தை - அதிர்ச்சி சம்பவம்!
மதுபானத்துக்காக மகனை அடித்து கொன்ற தந்தை - அதிர்ச்சி சம்பவம்!...
சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு கொடிய பூஞ்சையை கடத்திய பெண் கைது
சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு கொடிய பூஞ்சையை கடத்திய பெண் கைது...
தென் மாவட்ட ரயில் சேவையில் மாற்றம்.. முழு விவரம்!
தென் மாவட்ட ரயில் சேவையில் மாற்றம்.. முழு விவரம்!...
செம லக்.. அள்ளிக்கொடுக்கும் சுக்கிரன்.. பணமழை பொழியும் ராசிகள்!
செம லக்.. அள்ளிக்கொடுக்கும் சுக்கிரன்.. பணமழை பொழியும் ராசிகள்!...
விபத்துகளை தடுக்க புதிய வழி.. பேருந்துகளில் வரும் அதிநவீன கருவி!
விபத்துகளை தடுக்க புதிய வழி.. பேருந்துகளில் வரும் அதிநவீன கருவி!...
சினிமாவில் தொடர்ந்து நடிக்க தைரியம் கொடுத்தது அதுதான்...
சினிமாவில் தொடர்ந்து நடிக்க தைரியம் கொடுத்தது அதுதான்......
முட்டை கறி சமைக்காததால் ஆத்திரம்... மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்
முட்டை கறி சமைக்காததால் ஆத்திரம்... மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்...
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படமாட்டாது - அமைச்சர் பதில்
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படமாட்டாது - அமைச்சர் பதில்...
தவெக கல்வி விருது விழா.. மாணவர்களுக்கு பரிசளிக்கும் விஜய்
தவெக கல்வி விருது விழா.. மாணவர்களுக்கு பரிசளிக்கும் விஜய்...
3 படத்தின் ரிலீசுக்கு பிறகு 2 வருசம் பட வாய்ப்பே வரல...
3 படத்தின் ரிலீசுக்கு பிறகு 2 வருசம் பட வாய்ப்பே வரல......
இனி வெயில் கொளுத்த போகுது.. சென்னையில் எப்படி?
இனி வெயில் கொளுத்த போகுது.. சென்னையில் எப்படி?...