Anirudh: யார் ஹீரோ? ‘KH x RK’ திரைப்படம் குறித்து அனிருத் சொன்ன விஷயம்!
Anirudh About KH x RK: கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் மிக பிரம்மாண்டமாக உருவாகவுள்ள படம்தான் KH x RK. இப்படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றிவரும் நிலையில், தற்போது இப்படத்தில் பணியாற்றுவது குறித்தும் மற்றும் இப்படத்தை பற்றியும் தெரிவித்துள்ளார். அது குறித்து பார்க்கலாம்.

ரஜினி- கமல் படம் பற்றி அனிருத்
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. மேலும் இவர் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Suparstar Rajinikanth) போன்ற பிரபலங்களுடனும் படங்களில் பணியாற்றியுள்ளார். அந்த வகையில் இவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 (Jailer 2) படத்தையும் தற்போது இயக்கியுள்ளார். இப்படமானது இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. மேலும் இப்படத்தை அடுத்ததாக தமிழ் சினிமாவின் பிக் பட்ஜெட் திரைப்படமான KH x RK என படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட நடிகர்கள் கமல்ஹாசன் (Kamal Haasan) மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கவுள்ளனர். இவர்களின் கூட்டணி கிட்டத்தட்ட 47 வருடங்களுக்கு பின் மீண்டும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கவுள்ள நிலையில், இப்படத்திற்கு தற்காலிகமாக KH x RK என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதை ரெட் ஜெயண்ட் மூவிஸ் (Red Giant Movies) நிறுவனம் தயாரிக்க அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் தற்போது இப்படத்தில் பணியாற்றுவது குறித்த மகிழ்ச்சியை பேட்டி ஒன்றில் அனிருத் பகிர்ந்துள்ளர்.
இதையும் படிங்க: ‘என்னை நெகட்டிவ்வாக பேசினால் அதுதான் நடக்கும்’ – சமந்தா அதிரடி பேச்சு!
KH x RK பணியாற்றுவது குறித்து அனிருத் ரவிச்சந்தர் பகிர்ந்த விஷயம் :
அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அனிருத், “ரொம்பவே சிறப்பான தருணம்தான். ரெண்டு பெரிய ஹீரோவும் கிட்டத்தட்ட 47 வருடத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளார். அது எனது வயதை விடவும் அதிகம். இப்படம் மிகவும் சிறப்பான படமாக இருக்கும், இதில் பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இருவரும் சேர்ந்து நடிக்கும் நிலையில், வேடிக்கையான திரைப்படமாக இருக்கும் என நினைக்கிறேன். எங்களின் பெஸ்ட்-டை கொடுக்கிறோம்.
இதையும் படிங்க: இதுக்கு இல்லையா ஒரு எண்ட்… மீண்டும் தள்ளிப்போகும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ்?
ரஜினி மற்றும் கமல் சார் இருவருமே படத்தில் இணைந்தது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. நான் தனியாக ஏற்கனவே, கமல் சாருடனும் பணியாற்றியிருக்கிறேன், தலைவருடனும் பணியாற்றியிருக்கிறேன். தற்போது இருவரும் இணைந்து நடிக்கும் நிலையில், டபுள் ஹேப்பி. அந்த படத்திற்காக சிறப்பாக என்ன பண்ணலாம் என, இப்போதிருந்தே இசையமைப்பு பணிகள் நடந்துவருகிறது. மேலும் இப்படத்தின் ப்ரோமோவிற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பிற்கு நன்றி” என அதில் தெரிவித்திருந்தார்.
KH x RK திரைப்படம் குறித்து அனிருத் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Two icons. One frame. History in motion. This moment is what dreams are made of and emotional beyond comparison. #KHxRK Tamil Promo
Ulaganayagan @ikamalhaasan x Superstar @rajinikanth 🔥🔥🔥@Nelsondilpkumar ❤️❤️❤️@RedGiantMovies_ 💪🏻💪🏻💪🏻 https://t.co/xaCnJIP92b
— Anirudh Ravichander (@anirudhofficial) February 21, 2026
இசையமைப்பாளர் அனிருத் KH x RK திரைப்படத்தை தவிர்த்து, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் படங்களில் பணியாற்றிவருகிறார். இவரின் இசையமைப்பில், கிங், தி பாரடைஸ், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, ஜெயிலர் 2 என பல படங்கள் தயாராகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.