அங்கம்மாள் படம் எப்படி இருக்கு? பிரிவியூ ஷோ பார்த்தவர்கள் கொடுத்த விமர்சனம்

Angammal Movie Review: தமிழ் சினிமாவில் மிகவும் வித்யாசமான ஜானரில் வெளியாக உள்ள படம் அங்கம்மாள். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தற்போது பிரிவியூ காட்சியைப் பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை தெரிவித்துள்ளது. அது தற்போது வைரலாகி வருகின்றது.

அங்கம்மாள் படம் எப்படி இருக்கு? பிரிவியூ ஷோ பார்த்தவர்கள் கொடுத்த விமர்சனம்

அங்கம்மாள்

Published: 

03 Dec 2025 21:47 PM

 IST

தமிழ் சினிமாவில் வருகின்ற 5-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் அங்கம்மாள். இந்தப் படத்தை இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகை கீதா கைலாசம் முன்னணி வேடத்தி நடித்து உள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் சரண் சக்தி, பரணி, தென்றல் ரகுநாதன், யாஸ்மின், வினோத் மற்றும் முல்லையரசி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தை நஜாய் பிலிம்ஸ் மற்றும்
ஃபிரோ மூவி ஸ்டேஷன் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் படத்தின் பிரிவியூ ஷோ நிகழ்ச்சி சமீபத்தில் நடைப்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் படத்தைப் பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.

அங்கமாள் படத்தின் விமர்சனம் இதோ:

இந்தப் படத்திற்கு 5 மதிப்பெண்ணுக்கு 4 கொடுக்கும் அளவில் ஒரு வோர்ல்ட் கிளாஸ் படம் இது. ஒரு வலிமையான கிராமப்புறப் பெண்ணின் கதை.. மகன்களுடனான அவளது மோதல்.. மனித உணர்வுகள்.. அருமையான நாடகம்.. கீதா கைலாசம் முன்னணி வேடத்தில் வாழ்ந்திருக்கிறார்.

ஒரு எளிமையான மோதலைக் கொண்ட ஒரு அழுத்தமான காலகட்ட கிராமப்புற குடும்ப நாடகம். அங்கம்மாளாக கீதா கைலாசம் அருமையாக நடித்தார். நல்ல கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் மிகவும் இயல்பான நடிப்பு. மீதமுள்ள நடிகர்கள் நல்ல ஆதரவாக இருந்தனர்.

அங்கம்மாள் படத்தில் நடிகை கீதா கைலாசம் நடிப்பு மிகவும் இயல்பாக இருந்தது. இந்த கதாப்பாத்திரத்தில் அவர் வாழ்ந்து உள்ளார் என்பது தெரிகிறது. மேலும் நடிகர் சரண் சக்தி உட்பட அனைத்து நடிகர்களின் நடிப்பும் மிகவும் சிறப்பாக உள்ளது.

இந்த ஆண்டில் மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய படம். இந்தப் படம் பெண்களில் ஆடை சுதந்திரம் குறித்து பேசப்பட்டுள்ளது. இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் சிறப்பாக படத்தை இயக்கி உள்ளார். திரைக்கதை மிகவும் கவிதையாக உள்ளது. நடிகர்களின் நடிப்பும் மிகச் சிறப்பாக இருந்தது.

கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் பீட்சா மற்றும் பானி பூரி
மீண்டும் இணையும் பேட்ட காம்போ! - ஜெயிலர் 2 படத்தில் விஜய் சேதுபதி?
பிரணவ் மோகன்லாலின் டைஸ் ஐரே - ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு
இலங்கை, இந்தோனேசியாவை தாக்கிய இரட்டை புயல்கள் - 350க்கும் மேற்பட்டோர் பலி