Ajith Kumar: தமிழ் சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.. ரேஸ் களத்தில் அஜித் பேச்சு!

Ajith Kumar About Tamil Cinema: கோலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் அஜித் குமார். இவர் சினிமாவைத் தொடர்ந்து தற்போது கார் ரேஸில் தீவிரமாக இருந்து வருகிறார். சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அஜித், தமிழ் சினிமாவை பெருமைப் படுத்தியிருக்கிறார்.

Ajith Kumar: தமிழ் சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.. ரேஸ் களத்தில் அஜித் பேச்சு!

அஜித் குமார்

Updated On: 

28 Sep 2025 16:06 PM

 IST

தமிழ் சினிமாவில் நடிகராகவும், கார் ரேஸராகவும் இருநதுவருபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவரின் நடிப்பில் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்களும் வெளியாகி வருகிறது. இந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் இவரின் நடிப்பில் விடாமுயற்சி (Vidaamuyarchi) மற்றும் குட் பேட் அக்லி (Good bad Ugly) என இரு திரைப்படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. அதில் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் வெளியான குட் பேட் அக்லி படமானது உலகளவில் சுமார் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்ககளின் ஷூட்டிங் கடந்த 2024 ஆம் ஆண்டு இறுதியிலே நிறைவடைந்த நிலையில், அஜித் குமார் கார் ரேஸ் (Car Race) பயிற்சியில் தீவிரமாக இறங்கியிருந்தார். கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கும் மேலாக கார் போட்டிகளில் தீவிரமாக அஜித் குமார் இருந்து வருகிறார்.

மேலும் தற்போது, ஸ்பெயினில் நடைபெறவுள்ள கார் ரேஸ் போட்டிக்காக தயாராகிவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் அஜித் குமார் பேசியுள்ளார். அதில் அவர், “தமிழ் சினிமாவின் ஒரு பகுதியாக இருக்க பெருமைப்படுகிறேன்” என தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசியது பற்றி விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : பிரபாஸின் தி ராஜா சாப் படத்தின் ரிலீஸ் எப்போது? மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு

தமிழ் சினிமாவை பற்றி அஜித் குமார் பேசிய விஷயம் :

அந்த செய்தியாளர் சந்திப்பில் அஜித் குமார் பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். தொடர்ந்து பேசிய அவர், “எப்போதும் நான் ஒரு இந்தியனாக இருக்க பெருமைப்படுகிறேன், தமிழ் சினிமாவில் ஒரு பகுதியாக இருப்பதற்கு மிகவும் பெருமைப்படுகிறேன். ஒரு கார் ரேஸராக எனது நாட்டை பிரநிதித்துவபடுத்தி வருகிறேன்.

இதையும் படிங்க : பொது இடங்களில் திடம் வேண்டும்.. சாய் பல்லவி சொன்ன விஷயம்!

மேலும் எனது அடுத்த போட்டியில் இருந்து நான் இந்திய சினிமாவை விளம்பரப்படுத்துவதாக முடிவெடுத்துள்ளேன். மேலும் எனது கார் ரேஸ் லோகோவிலும் இந்திய சினிமாவை பிரதிபலிக்கும் சின்னத்தை வைத்திருக்கிறேன்” என பல்வேறு விஷயங்களை நடிகர் அஜித் குமார் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவை பற்றி அஜித் குமார் பேசிய வீடியோ பதிவு :

அஜித் குமரன் புதிய படத்தின் அப்டேட்

அஜித் குமாரின் புதிய திரைப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இந்த படமானது AK64 என தற்காலிகமாக அழைக்கப்பட்டுவருகிறது. அஜித்தின் இந்த படத்தை ரோமியோ பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ராகுல் தயாரிப்பதாக கூறப்படுகிறது.

மேலும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளாராம். இந்த படத்தின் ஸ்கிரிப்ட்ஸ் முழுவதுமாக நிறுவடைந்ததாகவும், விரைவில் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்றும் நடிகர் அஜித் குமார் அப்டேட் கொடுத்திருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2025 நவம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.