ரசிகர்களே தயாரா? ஸ்பாட்டிற்கு சென்று ஆய்வு செய்யும் அஜித் குமார் – வைரலாகும் வீடியோ!

Ajith Kumars Racing Journey:அஜித் குமார் தற்போது கார் ரேஸ் பணியில் தீவிரமாக இருந்துவருகிறார். அந்த வகையில் பிரான்சில் நடைபெறவுள்ள மிச்செலின் லீ மான்ஸ் போட்டிக்காக அஜித் தயாராகிவருகிறார். அந்த வகையில் ரேஸ் ட்ராக்கில் அஜித் ஆய்வு செய்யும் வீடியோவானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

ரசிகர்களே தயாரா? ஸ்பாட்டிற்கு சென்று ஆய்வு செய்யும் அஜித் குமார் - வைரலாகும் வீடியோ!

அஜித் குமார்

Updated On: 

30 Apr 2026 15:05 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் பிரபல நாயகனாகவும், இந்தியாவை பெருமைப்படுத்தும் கார் ரேஸராகவும் (Car Racer) இருந்துவருபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவர் கடந்த 2024ம் ஆண்டு இறுதியிலிருந்தே கார் ரேஸ் பணிகளில் தனது ஆர்வத்தை செலுத்திவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக குட் பேட் அக்லி (Good Bad Ugly) என்ற படமானது வெளியாகியிருந்தது. இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போதுவரை கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக கார் ரேஸ் பணியில் அஜித் இருந்துவருகிறார். அந்த வகையில் இவர் மலேசியா, இத்தாலி, அபுதாபி, ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் என பல்வேறு சர்வதேச போட்டிகளில், இந்தியாவின் சார்பாக தனது அணியுடன் அஜித் குமார் கலந்துகொண்டு, பல பரிசுகளையும் வென்றிருக்கிறார். அந்த வகையில் தற்போதும் புது புது ரேஸில் தனது அணியுடன் கலந்துகொள்வதாக, மொத்த அட்டவணையை அஜித் வெளியிட்டிருந்தார்.

அந்த வகையில் வரும் 2026 மே 2ம் தேதியில், பிரான்சில் நடைபெறவுள்ள மிச்செலின் லீ மான்ஸ் (Michelin Le Mans) என்ற போட்டியில் கலந்துகொள்கிறார். அந்த வகையில் ரேஸிங் ஸ்பாட்டை அஜித் குமார் ஆய்வு செய்யும் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: நூறு சாமி படத்திலிருந்து வெளியானது அம்மா அம்மா தான் பாடலின் புரோமோ வீடியோ

பிரான்ஸ் ரேஸ் களத்தில் அஜித் ஆய்வு செய்யும் வீடியோ குறித்த பதிவு:

அஜித் குமார் பிரான்சில் நடைபெறவுள்ள மிச்செலின் லீ மான்ஸ் என்ற போட்டியில் தனது அணியுடன் பங்குபெறவுள்ளார். இந்த போட்டியானது வரும் 2026 மே 2ம் தேதியில் நடைபெறவுள்ளது. சர்வதேச மோட்டார் போட்டிகளில் ஒன்றான, இந்த தொடரின் 2வது சுற்றுப் போட்டியானது, மே 2ம் தேதியில் சர்க்யூட் பால் ரிகார்டில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் அஜித்தின், அஜித் ரெடான்ட் ரேஸிங் சார்பில், இரு கார்கள் களமிறங்க உள்ளது. இதனால் அஜித்குமாரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்துவருகிறது. அந்த வகையில் இன்னும் ஒரு னால மட்டுமே இருக்கும் நிலையில், அஜித் குமார் தீவிரமாக ரேஸிங் ட்ராக்கை ஆய்வு செய்யும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கினார் ரஜினிகாந்த் – ரிலீஸ் எப்போது தெரியுமா?

நடிகர் அஜித் குமார் தற்போது முழுமையாக ரேஸிங் பணியில் இருந்துவருகிறார். இவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்னும் அதன் படப்பிடிப்புகள் எதுவும் தொடங்கவில்லை. இப்படத்தில் அஜித் தொடங்கியுள்ள புதிய தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..