Ajith Kumar: AK64 படத்தின் ஸ்கிரிப்ட் ரெடி.. அஜித் குமார் கொடுத்த அப்டேட் இதோ!
Ajith Kumars AK64 Update: கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக கலக்கிவருபவர் அஜித் குமார். இவரின் முன்னணி நடிப்பில் தொடர்ந்து திரைப்படங்கள் உருவாகிவரும் நிலையில், இவரின் அடுத்த படமாக AK64 படமானது உருவாகிவருகிறது. இந்த படத்தின் ஸ்கிரிப்ட் தயாராகியுள்ளதாக அஜித் குமார் அப்டேட் கொடுத்துள்ளார்.

அஜித் குமாரின் AK64 படக்குழு
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் அஜித் குமார் (Ajith kumar). தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமில்லாமல் , இந்தியாவின் சார்பாக பல்வேறு நாடுகளில் நடைபெறும் கார் ரேஸ் (Car Race) போட்டிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். இதுவரை இந்தியாவிற்கு 4 வெற்றி கோப்பைகளை வென்றிருக்கிறார். அந்த வகையில் ஒட்டுமொத்த பான் இந்தியாவின் பார்வையும் தன்மீது படும்படியான சாதனைகளை செய்துவருகிறார் அஜித் குமார். இவரின் நடிப்பில் கோலிவுட் சினிமாவில் இறுதியாக வெளியான படம் குட் பேட் அக்லி (Good bad Ugly). இந்த படமானது கடந்த 2025 ஏப்ரல் 10ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியானது. இந்த படத்தில் அஜித் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்திருந்தார்.
இந்த படமானது வெளியாகி சிறப்பான வெற்றி பெற்றிருந்த நிலையில், அதைத் தொடர்ந்து தனது அடுத்தப்படமான AK64 படத்தையும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் (Adhik Ravichandran) கூட்டணியில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், இந்த படத்தை பற்றி அஜித் குமார் அப்டேட் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க : OG படத்திற்கு மக்கள் கொடுத்த வரவேற்பு – நெகிழ்ந்த பிரியங்கா மோகன்
AK64 படம் குறித்து அப்டேட் கொடுத்த அஜித் குமார் :
சமீபத்தில் கார் ரேஸ் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் அஜித் குமார் பேசியிருந்தார். அந்த சந்திப்பில் தொடர்ந்து பேசிய அஜித், தனது அடுத்த திரைப்படத்தின் அப்டேட் கூறியுள்ளார். அந்த சந்திப்பில் அஜித் குமார், “எனது அடுத்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளது. அந்த படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது.
இதையும் படிங்க : நான் சிலம்பரசனுடன் நடிக்கவிருந்த முதல் படம் அதுதான் – கயாடு லோஹர் சொன்ன விஷயம்!
நானும் அந்த படத்திற்காக கையெழுத்திட்டுள்ளேன். மேலும் அந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக காத்திருக்கிறேன். மேலும் அந்த அறிவிப்புகளை படக்குழு விரைவில் வெளியிடும்” என நடிகர் அஜித் குமார் அப்டேட் கொடுத்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
AK64 படம் குறித்து பேசிய அஜித் குமாரின் வீடியோ பதிவு :
#AjithKumar about #AK64 💥
– The script is getting ready, it’s just bound by contract🖋📃
– I need to wait before we make the formal announcement🎬#AdhikRavichandran #Anirudhpic.twitter.com/PVle2CRTi5— Movie Tamil (@_MovieTamil) September 28, 2025
அஜித் குமாரின் இந்த 64வது படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள நிலையில், ரோமியோ பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கவுள்ளாராம். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகைகள் அஞ்சலி, ஸ்வாசிகா மற்றும் நடிகை ஸ்ரீ லீலா போன்ற பல்வேறு பிரபலங்கள் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2025 நவம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளதாம்.