Ajith Kumar: ‘இது தியேட்டர் கிடையாதுங்க ப்ளீஸ்’.. ரசிகரிடம் கோபப்பட்ட அஜித் குமார் – வைரலாகும் வீடியோ!

Ajith Kumar Angrily Scolding A Fan: தென்னிந்திய சினிமாவில் பிரபல நாயகனாக இருந்தவருபவர் அஜித் குமார். இவர் துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் இருந்துவருகிறார். இந்நிலையில், பயிற்சியின்போது இடையூறு செய்த ரசிகரிடம், அஜித் குமார் கோபமாக பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Ajith Kumar: இது தியேட்டர் கிடையாதுங்க ப்ளீஸ்.. ரசிகரிடம் கோபப்பட்ட அஜித் குமார் - வைரலாகும் வீடியோ!

அஜித் குமார்

Updated On: 

10 Feb 2026 10:58 AM

 IST

நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) தமிழ் சினிமாவில் சிறந்த நாயகனாக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக குட் பேட் அக்லி (Good Bad Ugly) என்ற திரைப்படமானது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Aadhik Ravichandran) இயக்க, அஜித் மற்றும் திரிஷா இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது 2025ம் ஆண்டில் அஜித் குமாரின் வெற்றி திரைப்படமாக அமைந்திருந்தது. இந்நிலையில் நடிகர் அஜித் குமார் தற்போது சினிமாவில் மட்டும் பிசியாக இல்லாமல், தனது நீண்டநாள் ஆசையான கார் ரேஸ் போட்டிகளில் (Car racing) கலந்துகொண்டுவருகிறார். கடந்த 2024ம் ஆண்டு இறுதிமுதல் கார் ரேஸ் பயிற்சியில் அஜித் குமார் தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், இந்தியாவின் சார்பாக இதுவரை கிட்டத்தட்ட ஐந்து 24H கார் ரேஸ் போட்டிகளில் தனது அணியுடன் கலந்துகொண்டுள்ளார். இதில் நான்கு போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளார். அந்த விதத்தில் இவர் தற்போது தனது அணியுடன் துபாயில் (Dubai) கார் ரேஸ் பயிற்சியில் பிசியாக இருந்துவருகிறார்.

இந்நிலையில் இவரை துபாயில் நேரில் சென்று பல நடிகர்கள் மற்றும் இயக்குநர்களும் சந்தித்துவருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. அதி அஜித் குமார் ரேஸ் களத்தில் தொந்தரவு செய்த ரசிகரை கோபமாக திட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் தீயாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: வேறு எந்த படத்திலும் அதுபோன்ற திருப்தி இல்லை – அனுபமா பரமேஸ்வரன்!

அஜித் குமார் ரசிகரை திட்டியது குறித்து வைரலாகும் வீடியோ பதிவு:

அந்த வீடியோவில் அஜித் குமார், “தயவுசெய்து தன்மையாக நடந்துகொள்ளுங்கள்.. இது தியேட்டர் கிடையாதுங்க ப்ளீஸ்” என அதில் கோபத்துடன் திட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

துபாயில் அஜித் குமாரை சந்தித்த பிரபலங்கள் :

இந்த் வாரத்தில் மட்டுமே பல பிரபலங்கள் அஜித் குமாரை நேரில் சந்தித்துள்ளார். சில நாட்களுக்கு முன் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சந்தித்திருந்தார். அதை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்திருந்தார். இதில் அஜித்தை சந்தித்தது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனல் பதிவை வெளியிட்டிருந்தார். அதை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபுவும் அஜித் குமாரை நேரில் சந்தித்து அவரின் கார் ரேஸிற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: ஓடிடியில் சாதனை படைத்த சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம்.. அப்படி என்ன செய்தது தெரியுமா?

இதை தொடர்ந்து மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியாருக்கு அஜித்தை சமீபத்தில் நேரில் சந்தித்துள்ளனர். இது தொடர்பாக அவர் நேர்காணல் ஒன்றிலும் பேசியுள்ளார். இவர் குட் பேட் அக்லி படத்தில் அஜித் குமாரின் மகனின் காதலியாக நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வாரத்தின் முதல் நாளே கடுமையாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா?
யூடியூபின் Auto-Dubbing.. இனி கூடுதல் சிறப்புடன் பயனர்களுக்கு வழங்கப்படும்..
150 கோடி வசூல்.. ட்ரெண்டிங்கில் இருக்கும் சர்வம் மாய..
லெஜெண்ட் சரவணனின் புதிய படம்.. வெளியான லீடர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்