Adhik Ravichandran: AK64 அனைவரும் கொண்டாடும் படமாக இருக்கும் – அப்டேட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்!
AK64 Movie Update: தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்து வருபவர் அஜித் குமார். இவரின் நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள படம்தான் AK64. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் AK64 படத்தை பற்றி அப்டேட் கொடுத்துள்ளார். அது குறித்து தெளிவாக பார்க்கலாம்.

அஜித் குமார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன்
கோலிவுட் சினிமாவில் கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் வெளியாகி அனைவரையும் அலறவிட்ட திரைப்படம்தான் குட் பேட் அக்லி (Good Bad Ugly). அஜித் குமார் (Ajith Kumar) முன்னணி நடிப்பில் வெளியான இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கியிருந்தார். இவர்கள் இருவரின் கூட்டணி, இப்படத்தில்தான் முதன்முறையாக இணைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த குட் பேட் அக்லி படமானது சுமார் ரூ 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட்டடித்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரன் தனது அடுத்த திரைப்படத்தையும் அஜித் குமாரை வைத்துதான் இயக்கவுள்ளார். இந்த படமானது தற்போது AK64 என ரசிகர்கள் எதிர்பார்த்துவரும் நிலையில், அந்த படம் குறித்த தகவல்களும் இணையத்தில் ஒவொன்றாக வெளியாகிவருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ஆதிக் ரவிச்சந்திரன் கலந்துகொண்டார். அது நிகழ்ச்சியில் பேசிய அவர் AK64 படம் பற்றி அப்டேட் கொடுத்துள்ளார். இந்த AK64 படமானது அனைவருக்குமான படமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கவினின் ‘மாஸ்க்’ பட முதல் சிங்கிள் எப்போது? புரோமோவுடன் வெளியான அறிவிப்பு இதோ!
AK64 திரைப்படம் குறித்து அப்டேட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்:
சமீபத்தில் கலந்துகொண்ட அதிக ரவிச்சந்திரனிடம் AK64 திரைப்படம் பற்றி அப்டேட் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தபடி மேடையில் பேசிய ஆதிக் ரவிச்சந்திரன் , “போன படமானது ரசிகர்களுக்கான திரைப்படமாக இருந்தது, ஆனால் இப்ப வரும் படம் அப்படி இல்லை. இந்த AK64 படமானது அனைவருக்கான திரைப்படமாக இருக்கும், எல்லாரும் என்ஜாய் பண்ணி பாக்கிற மாதிரியான திரைப்படமாக இது இருக்கும்.
இதையும் படிங்க : STR49 படத்தின் புரோமோ ரிலீஸ் ஒத்திவைப்பா? தயாரிப்பாளர் வெளியிட்ட பதிவிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!
பேமிலி மற்றும் ரசிகர்கள் அனைவரும் இணைந்து பார்க்கும், ஆக்ஷன் மற்றும் பொழுதுபோக்கு திரைப்படமாக இந்த AK64 திரைப்படமானது இருக்கும் என இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஓபனாக பேசியுள்ளார். இந்த தகவலானது தற்போது அஜித் குமாரின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
அஜித் குமாரின் AK64 திரைப்படம் பற்றி பேசிய ஆதிக் ரவிச்சந்திரன் வீடியோ :
#AdhikRavichandran Recent
– I’ve done #GoodBadUgly for the fans, but everyone will enjoy #AK64.
– It’s an entertaining action film both family and fans will celebrate its screenplay.#AjithKumar pic.twitter.com/TuuTNs3yoj— Movie Tamil (@_MovieTamil) October 5, 2025
இந்த AK64 திரைப்படத்தில் அஜித் குமார் ஹீரோவாக நடிக்க, அவருடன் நடிகர்கள் அஞ்சலி, ஸ்ரீலீலா , ஸ்வாசிகா என பல்வேறு பிரபலங்கள் இணைந்து னைப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவிருக்கும் நிலையில், ரோமியோ பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரிக்கவுள்ளது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2025 நவம்பர் மாதத்தில் தொடங்கும் நிலையில், விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது.