ஸ்கூல் யூனிஃபார்மில் இருக்கும் இந்த சிறுமி இப்போ ஸ்டார் நடிகை… யார் தெரியுமா?
Actress Childhood Photos: சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பிரபலங்கள் பலரும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்கள். இவர்களின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தொடர்ந்து வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் தற்போது அவர்களின் சிறு வயது புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

த்ரிஷா கிருஷ்ணன்
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் (Actress Trisha Krishnan). இவர் மாடலிங் துறையில் பிரபலமாக இருந்து பின்பு அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றுள்ளார். பல விளம்பரப் படங்களில் நடித்து வந்த நடிகை த்ரிஷா நடிகர்கள் பிரஷாந்த் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான த்ரிஷா தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் நடிக்கத் தொடங்கினார். இவர் பான் இந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு தொடர்ந்து ஜோடியாக நடித்தப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்குப் பிறகும் நாயகியாகவே வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய், அஜித், கமல் ஹாசன், ரஜினிகாந்த், சூர்யா, விக்ரம், ரவி மோகன், ஆர்யா, சிலம்பரசன், ஜீவா, விஜய் சேதுபதி என பலருடன் இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடித்தப் படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஸ்கூல் யூனிஃபார்மில் கியூட்டாக இருக்கும் த்ரிஷா கிருஷ்ணன்:
இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து நடிகை த்ரிஷா கிருஷ்ணனின் நடிப்பில் தொடர்ந்து வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்படி இந்த 2025-ம் ஆண்டு தமிழ் மற்றும் மலையாளன் என இரண்டு மொழிகளிலும் இதுவரை 4 படங்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை த்ரிஷா கிருஷ்ணனின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி இந்த புகைப்படத்தில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் கியூட்டாக ஸ்கூல் யூனிஃபார்மில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… வெளியீட்டிற்கு 50 நாட்களே உள்ள பராசக்தி படம்… புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு