வாலி, துள்ளாத மனமும் துள்ளும் படங்களுக்கு பிறகுதான் நான் அதை உணர்ந்தேன் – சினிமா வாழ்க்கை குறித்து நடிகை சிம்ரன் சொன்ன விசயம்!
Actress Simran: தமிழ் சினிமாவில் 90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். தமிழில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடிப் போட்டு நடித்த இவர் தற்போது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகை சிம்ரன்
தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன் (Actress Simran). இந்தி சினிமாவில் நாயகியக அறிமுகம் ஆன சிம்ரன் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டிக் பறந்தார். தமிழில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள் விஜய், அஜித், கமல் ஹாசன், பிரசாந்த், அர்ஜுன், சரத்குமார் என பலருக்கு நாயகியாக நடித்துள்ளார். தொடர்ந்து நாயகியாக நடித்து வந்த நடிகை சிம்ரன் தற்போது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களில் தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக டூரிஸ்ட் ஃபேமிலி படம் ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை சிம்ரன் தனது சினிமா கெரியரில் அவர் நடித்த வாலி, பிரியமானவளே மற்றும் துள்ளாத மனுமும் துள்ளும் படங்களுக்குப் பிறகு தான் சரியான இடத்தில் இருப்பதாக உணர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தான் தேர்ந்தெடுக்கும் படங்களில் தனது பங்களிப்பை சிறப்பாக கொடுக்க வேண்டும் என்றும் முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
நடிகை சிம்ரனின் இன்ஸ்டா பதிவு:
முன்னணி நாயகி டூ கேரக்டர் ஆர்டிஸ்ட்:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த இவர் திருமணத்திற்கு பிறகு ஒரு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதாக இருந்தாலும் சரி வில்லியாகவோ, அண்ணியாகவோ, சிறப்புக் கதாப்பாத்திரத்திலேயோ தொடர்ந்து நடித்து வருகிறார். குட் பேட் அக்லி படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது இவர் முன்னணி நடிகையாக நடித்தப் படம் டூரிஸ்ட் ஃபேமிலி படம். இந்தப் படம் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படத்தில் நடிகை சிம்ரனின் நடிப்பை ரசிகர்களும் பிரபலங்களும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனது குறிப்பிடத்தக்கது.
நடிகை சிம்ரன் நடிப்பில் ஹிட் அடித்தப் படங்கள்:
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பான் இந்திய மொழிகளில் நடிகை சிம்ரன் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதில் தற்போது ரசிகர்கள் சிம்ரனின் நடிப்பில் கொண்டாடப்படும் தமிழ் படங்கள் என்ன என்று பார்த்தால், அதில் துள்ளாத மனமும் துள்ளும், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, கண்ணுபட போகுதய்யா, வாலி, பிரியமானவளே, பஞ்சத்தந்திரம், வாரணம் ஆயிரம் ஆகிய படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.