இதுதான் பெண்களுக்கான சுதந்திரமா? தி கேர்ள்ஃப்ரண்ட் படத்தினை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

The Girlfriend Movie: தெலுங்கு சினிமாவில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தப் படம் தி கேர்ள்ஃப்ரண்ட். இந்தப் படத்தை பெண்கள் கொண்டாடும் அளவிற்கு அதில் என்ன தான் சொல்லி இருக்கார்கள் என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

இதுதான் பெண்களுக்கான சுதந்திரமா? தி கேர்ள்ஃப்ரண்ட் படத்தினை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

தி கேர்ள்ஃப்ரண்ட்

Updated On: 

12 Jan 2026 22:11 PM

 IST

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டில் அடுத்தடுத்துப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் நாயகியை மையமாக வைத்து கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் ராகுல் ரவீந்திரன் எழுதி இயக்கி இருந்தார். நடிகை ராஷ்மிகா மந்தனா முன்னணி வேடத்தில் நடித்து இருந்த நிலையில் நடிகர்கள் தீக்ஷித் ஷெட்டி, ராகுல் ரவீந்திரன், அனு இம்மானுவேல், ராவ் ரமேஷ், ரோகினி மொல்லேட்டி ஆகியோர் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்கள் இதனைக் கொண்டாடித் தீர்த்தனர். குறிப்பாக பெண்கள் இந்தப் படத்தை அதிக அளவில் கொண்டாடித் தீர்த்தனர்.

தி கேர்ள்ஃப்ரண்ட் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மென்ட் மற்றும் கீதா ஆர்ட்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் வித்யா கொப்பிநீடி மற்றும் தீரஜ் மொகிலினேனி ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ராஷ்மிகா மந்தனாவின் தி கேர்ள் ஃப்ரண்ட் படத்தின் கதை என்ன?

ராஷ்மிகா மந்தனா பிறக்கும் போதே அவரது அம்மா இறந்துவிடுகிறார். அதனைத் தொடர்ந்து தனது தந்தையின் கண்டிப்பான வளர்ப்பில் வளர்கிறார் ராஷ்மிகா. இப்படி இருக்கும் நிலையில் முதுகலை படிப்பிற்காக ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார். அந்த கல்லூரியில் ஆண்கள் பெண்களுக்கு எந்தவித கட்டுபாடும் கிடையாது.

இப்படி இருக்கும் சூழலில் எதிர்பாராத விதமாக நாயகன் தீரஜ் உடன் ராஷ்மிகாவிற்கு நட்பு ஏற்படுகிறது. இருவரும் காதலிப்பதாக கல்லூரி முழுவதும் கூறிவந்த போது அப்படி எதுவும் இல்லை நாங்க நண்பர்கள் என்று கூறி வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இப்படி இருக்கும் நிலையில் ராஷ்மிகா பார்க்க வேண்டும் என்று சொன்ன ஹாய் நானா படத்தை டவுன்லோட் செய்து வைத்து இருப்பதாக தீரஜ் அவரது ஹாஸ்டல் அறைக்கு ராஷ்மிகாவை அழைக்கிறார். அங்கு படத்தைப் பார்க்க சென்ற ராஷ்மிகா படம் முடிந்ததும் வெளியே செல்லும் போது அவரை தீரஜ் தடுத்து நிறுத்து முத்தம் கொடுக்கிறார்.

காதல் எதுவும் இல்லை நட்பு மட்டும்தான் என்று சொல்லும் ராஷ்மிகா தீரஜ் முத்தம் கொடுக்கும் போது தடுக்கவே இல்லை. அந்த முத்தத்தை தொடர்ந்து அவர்கள் இருவரும் அன்று இரவே நெருக்கமாக இருந்துவிடுகிறார். காதல் இல்லை நட்பு மட்டுமே என்று கூறியவர் அன்று இரவு ஒன்றாக இருந்த பிறகு மொத்த கல்லூரிக்கும் அவர்கள் காதல் ஜோடி சென்று செய்தி பரவிகிறது. அதனை தீரஜ்தான் கூறினாலும் தனக்கும் பிடித்து அப்படியே ஏற்றுக்கொள்கிறார் ராஷ்மிகா.

Also Read… ரவி மோகனுக்காக மட்டும்தான் படம் ஓடும்.. பராசக்தி படத்தை பார்த்த பாடகி கெனிஷா பேச்சு!

தனது அப்பா மிகவும் கண்டிப்பானவர். இந்த கல்லூரிக்கு படிக்கதான் வந்தேன் என்று கூறிய ராஷ்மிகா அதனைத் தொடர்ந்து தனது அப்பாவை ஏமாற்றிவிட்டு தனது காலனுடன் நெறுக்கமாக சுற்றி வருகிறார். இது ஒருகட்டத்தில் ராஷ்மிகாவின் தந்தைக்கு தெரியவந்து அவர் நீ என் பொண்ணே இல்லை என்று வெறுத்து கூறிவிட்டு செல்கிறார்.

இந்த சூழலில் தனது காதலன் தனக்கு மனைவியாக வருபவர் வீட்டை பார்த்துக்கொண்டு தனது குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு வீட்டிலேயே இருக்கும் மனைவியாக தான் இருக்க வேண்டும் என்று கூறியது ராஷ்மிகாவால் ஏற்ற்குக் கொள்ள முடியவீல்லை. இதனால் அந்த காதலை வேண்டாம் என்று ராஷ்மிகா கூற அவரது காதலன் பழிவாங்கும் நோக்கத்தில் ராஷ்மிகா குறித்து தவறான செய்திகளை பரப்புகிறார். இது கல்லூரி முழுவதும் பரவியதை அடுத்து ராஷ்மிகா அதனை எவ்வளவு தைரியமாக கையாண்டார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… Rio: தலைவா பட பிரச்னை அப்போ கவின் செய்த விஷயம்.. – ரியோ ராஜ் சொன்ன விஷயம்!

ரஷ்யக் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா.. ரஷ்யா கடும் எதிர்ப்பு!
ஒரு கைக்குட்டையின் விலை ரூ.7 லட்சம் என்றால் நம்புவீர்களா? வேறெங்கும் இல்லை, இந்தியாவில் தான்..
வேகமாக உருகிய பனி.. 'சுனாமி' போல் ஏற்பட்ட வெள்ளம்!!
புதியதாக வாகனம் வாங்குபவர்கள் RTO செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு..