Ranya Rao: தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை ரன்யா ராவ்.. ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு!
Gold Smuggling Case: தங்கக் கடத்தல் வழக்கில் கன்னட நடிகை ரன்யா ராவ் ஒரு வருடம் சிறை தண்டனை பெற்றுள்ளார். விக்ரம் உடன் "வாகா" படத்தில் நடித்த இவர், துபாயில் இருந்து 14.2 கிலோ தங்கத்துடன் பிடிபட்டார். அந்நிய செலாவணி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இத்தண்டனை விதிக்கப்பட்டது. ஜாமீன் மனுக்கள் ஏற்கப்படவில்லை. வருவாய் புலனாய்வுத்துறை விசாரணை மேற்கொள்கிறது.

நடிகை ரன்யா ராவ் கைது
தங்கக் கடத்தல் வழக்கில் கன்னட திரைப்பட நடிகை ரன்யா ராவுக்கு (Ranya Rao) ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் தமிழில் நடிகர் விக்ரம் பிரவுடன் இணைந்து ’வாகா’ திரைப்படத்தில் (Gold Smuggling Case) நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ரன்யா ராவ் மீது அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் (COFEPOSA) ஆலோசனை குழுவால் நேற்று அதாவது 2025 ஜூலை 16ம் தேதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தண்டனைக் காலம் முடியும் வரை ரன்யா ராவுக்கு ஜாமீன் பெறும் உரிமையை வாரியம் மறுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2025 மே 20ம் தேதி பெஙக்ளூரு நீதிமன்றம் ரன்யா ராவ் மற்றும் அவரது கூட்டாளியான தருண் ராஜூவுக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய தவறியதே காரணம் என்று கூறப்படுகிறது.
ALSO READ: ‘கூலி’ படத்தின் கதை இதுவா? இணையத்தில் கசிந்த தகவல்!
ரூ. 2 லட்சம் பிணை மற்றும் ஜாமீன் நிபந்தனைகளின் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்ட போதிலும், ரன்யா ராவ் மற்றும் தருண் ராஜூக்கு அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டம் (COFEPOSA) கீழ் காவலில் வைக்கப்பட்டனர். கடத்தல் சந்தேகத்தின் அடிப்படையில் எந்தவொரு முறையான குற்றச்சாட்டும் இல்லாமலும் கூட, அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டம் ஒரு வருடம் வரை காவலில் வைக்க அனுமதிக்கிறது.
ரன்யாவிடம் இருந்து தங்கம் மீட்பு:
🚨 Actress Ranya Rao sentenced to 1 year in jail for gold smuggling!
She was caught red-handed smuggling gold from Dubai.
🔸 14.7 kg gold seized
🔸 ED recently attached properties worth ₹34.12 Cr in Bengaluru#RanyaRao #GoldSmuggling #ED #CrimeNews #IndiaNews pic.twitter.com/j2uYFNE0gm— Tirish Reddy (@tirishreddy) July 17, 2025
கடந்த 2025 மார்ச் மாதம், ரன்யா ராவ் துபாயிலிருந்து வந்து கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் பச்சை கால்வாய் வழியாக செல்ல முயன்றார். அப்போது டிஆர்ஐ அதிகாரி ரன்யாவிடம் ஏதேனும் முறையில்லாத பொருட்கள் உங்களிடம் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். அந்தநேரத்தில், ரன்யா ராவ் மிகவும் பதற்றமடைந்தார். இதையடுத்து சந்தேகத்தின்பேரில் நடிகர் ரன்யா ராவ் மற்றும் அவரது பொருட்களை சோதனை செய்தபோது, அவரிடம் இருந்து சுமார் ரூ.12.56 கோடி மதிப்புள்ள மொத்தம் 14.2 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. இதன் பின்னர், ரன்யா கைது செய்யப்பட்டார். ரன்யாவின் முந்தைய ஜாமீன் மனு உள்ளூர் நீதிமன்றத்தால் இரண்டு முறை நிராகரிக்கப்பட்டது, பின்னர் கர்நாடக உயர் நீதிமன்றத்தாலும் நிராகரிக்கப்பட்டது.
ALSO READ: லோகேஷ் கனகராஜின் தயாரிப்பு.. ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் ஷூட்டிங் நிறைவு!
விசாரணையில், ரன்யா ராவ் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பல முறை சென்றதாகக் கூறியிருந்தார். ரன்யா தற்போது பெங்களூரு மத்திய சிறையில் தருண் ராஜூ மற்றும் சாஹில் சகாரியா ஆகிய இருவர் உடன் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் மற்றும் அமலாக்க இயக்குநரகம் மற்றும் சிபிஐ விசாரித்து வருகின்றன. அவர்கள் மீது சுங்கச் சட்டத்தின் பிரிவுகள் 135 மற்றும் 104 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரிவு 108 இன் கீழ் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. விசாரணையில் 2023 மற்றும் 2025 க்கு இடையில் ரன்யா மட்டும் 34 முறை துபாய்க்கு சென்றிருப்பது தெரியவந்தது.