நான் மிகப்பெரிய கார்த்தி சார் ரசிகை… ஓபனாக பேசிய கீர்த்தி ஷெட்டி
Actress Kirithi Shetty: இந்தி சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார் நடிகை கீர்த்தி ஷெட்டி. இந்த நிலையில் இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கார்த்திகீர்த்தி ஷெட்டி
கடந்த 2019-ம் ஆண்டு இந்தி சினிமாவில் வெளியான சூப்பர் 30 என்ற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை கீர்த்தி ஷெட்டி. இவர் இந்தப் படத்தில் நடிகையாக அறிமுகம் ஆகும் போது வயது 16 தான். இந்தப் படத்தில் நாயகியாக இவர் நடிக்கவில்லை என்றாலும் அதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நாயகியானார் நடிகை கீர்த்தி ஷெட்டி. அதன்படி தெலுங்கு சினிமாவில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான உப்பேனா என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகம் ஆனார். இவர் நாயகியாக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை கீர்த்தி ஷெட்டி தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றார்.
தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் அதிகரித்து வந்தனர். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடித்து வந்த நடிகை கீர்த்தி ஷெட்டி தற்போது தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் மட்டும் தற்போது அடுத்தடுத்து மூன்று படங்களில் வரிசையாக நடித்து வருகிறார். அதன்படி நடிகர் கார்த்தி உடன் இணைந்து வா வாத்தியார், பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் ரவி மோகன் உடன் இணைந்து ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி அளித்தப் பேட்டி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
நான் மிகப்பெரிய கார்த்தி சார் ரசிகை:
இந்த நிலையில் அந்தப் பேட்டியில் நடிகை கீர்த்தி ஷெட்டி கூறியுள்ளதாவது, நான் கார்த்தி சாரின் பெரிய ரசிகை. நான் தி வாரியர் படத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, லிங்குசாமி சாரிடம் கார்த்தி சாரை சந்திக்கலாமா என்று கேட்டேன், ஆனால் அது நடக்கவில்லை. நதியா மேடம் என்னை ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் அவரிடம் பேச வைக்க முயற்சித்தார் என்றும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
Also Read… தலைவர் 173 படத்திற்காக ரஜினிகாந்திற்கு கதை சொன்ன தனுஷ்? வைரலாகும் தகவல்
இணையத்தில் கவனம் பெறூம் கீர்த்தி ஷெட்டி பேச்சு:
#KrithiShetty about #Karthi
– I was a big fan of Karthi sir. When I was working on The #Warrior, I asked #Lingusamy sir if I could meet Karthi sir, but it didn’t happen.
– Nadiya ma’am actually tried to make me speak to him over a call.#VaaVaathiyaarpic.twitter.com/iMoui5sBuC— Movie Tamil (@_MovieTamil) December 6, 2025
Also Read… ஜாலி டூ மீட் யூ… காமெடி, ஆக்ஷன், ரொமாண்டிக் பாணியில் வெளியானது வா வாத்தியார் பட ட்ரெய்லர்