நிச்சயமாக சேர்ந்து நடிப்பேன் – ஃபகத் பாசிலை புகழ்ந்து தள்ளிய ஆலியா பட்

Fahadh Faasil: மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஃபகத் பாசில். இவர் தென்னிந்திய மொழிகளில் மட்டும் இன்றி பான் இந்திய சினிமாவிலும் தனது திறமையால் புகழின் உச்சத்தில் உள்ளார். இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை இவருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.

நிச்சயமாக சேர்ந்து நடிப்பேன் - ஃபகத் பாசிலை புகழ்ந்து தள்ளிய ஆலியா பட்

ஃபகத் பாசில்

Updated On: 

26 May 2025 13:16 PM

 IST

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த பிரபல இயக்குநர் பாசிலின் மகன் தான் நடிகர் ஃபகத் பாசில் (Fahadh Faasil). பாசில் தமிழில் பூவே பூச்சூடவா, பூவிழி வாசலில், என் பொம்முகுட்டி அம்மாவுக்கு, வருஷம் பதினாறு, காதலுக்கு மறியாதை என பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவரது இளைய மகன் தான் நடிகர் ஃபகத் பாசில். பிரபல இயக்குநரின் மகனாக சினிமாவில் களம் இறங்கினாலும் அறிமுக காலம் அவ்வளவு சிறப்பாக ஃபகத் பாசிலுக்கு அமையவில்லை. மலையாளத்தில் தான் ஹீரோவாக நடித்த முதல் படம் தோல்வியை சந்தித்தது. பலர் ட்ரோல் செய்தது குறிப்பிடத்தக்கது. 2002-ம் ஆண்டு தனது தந்தை பாசிலின் இயக்கத்தில் வெளியான கையேத்தும் தூரத் படத்தில் நாயகனாக அறிமுகம் ஆன ஃபகத் பாசில் படம் தோல்வியை சந்தித்ததும் சினிமாவில் நடிப்பதில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தார்.

வெளிநாட்டிற்கு சென்ற ஃபகத் பாசில் 7 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள சினிமாவில் தனது மாஸ் என்ட்ரியை கொடுத்தார். ட்ரோல் செய்தவர்கள் எல்லாம் மூக்கின் மீது விரலை வைப்பது போல 2009-ம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான கேரளா கஃபே படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

வெற்றி நாயகனாக மாறிய ஃபகத் பாசில்:

நடிகராக தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் ட்ரோல் செய்யப்பட்ட ஃபகத் பாசில் தற்போது திரையில் தோன்றினாலே அரங்கம் அதிர கத்துகிறார்கள் ரசிகர்கள். தனது மிரட்டும் நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார் ஃபகத் பாசில். மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்த ஃபகத் பாசில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறார் என்றே சொல்லலாம்.

மலையாள சினிமாவில் இவரது நடிப்பில் 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான ஆவேசம் படம் பான் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ரங்கன் சேட்டா என்ற கேங்ஸ்டராக நடிப்பில் கலக்கி இருந்தார் நடிகர் ஃபகத் பாசில். இந்த ஆண்டும் இவரது நடிப்பில் படங்கள் வெளியாக வரிசைக் கட்டி காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஃபகத் பாசிலுடன் நடிக்க விருப்பம் தெரிவித்த ஆலியா பட்:

2025-ம் ஆண்டிற்கான கேன்ஸ் திரைப்பட விழா கோலகலமாக நடைப்பெற்று வருகின்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் செய்தியாளர்களிடம் பேசியபோது நடிகர் ஃபகத் பாசிலுடன் இணைந்து நடிக்க ஆர்வமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். நிச்சயமாக அவருடன் ஒருநாள் பணியாற்றுவேன் என்றும்  தெரிவித்துள்ளார்.

நடிகை ஆலியா பட் இன்ஸ்டா போஸ்ட்:

முன்னதாக ஃபகத் பாசிலின் நடிப்புத் திறமையை நடிகை ஆலியா பட் வெகுவாகப் பாராட்டியுள்ளார். மேலும் அவரது நடிப்பில் வெளியான ஆவேசம் படம் தனக்கு மிகவும் பிடித்தது என்றும் நடிகை ஆலியா பட் தெரிவித்துள்ளார்.

Follow Us
Related Stories
ஜெயராம் – பிரித்வி பாண்டியராஜனின் கதாப்பாத்திர போஸ்டர்களை வெளியிட்டது கர படக்குழு
சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு படம் நடைபெறாதா? இணையத்தில் வைரலாகும் தகவல்
கர படத்தில் மமிதா பைஜுவின் கதாப்பாத்திரம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் – இயக்குநர் விக்னேஷ் ராஜா
சூர்யாவின் அந்தப் படம் வாழ்க்கையைப் பற்றி எனது முழு கண்ணோட்டத்தையும் மாற்றியது – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து
நிஜ வாழ்க்கையிலும் பாரு என்னிடம் நடிப்பதாகவே எனக்கு இப்போதும் தோன்றுகிறது – விஜய் சேதுபதி
இயக்குநராக நான் இயக்கிய படங்களைவிட கருப்பு 15 மடங்கு பெரிய படம் – இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..