Kingdom : கடவுள் கொடுத்த வரம்….. ரசிகர்கள் முன்னிலையில் உணர்ச்சிவசப்பட்ட விஜய் தேவரகொண்டா
கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்ஸ், சத்ய தேவ் உள்ளிட்டோர் நடிப்பில் வருகிற ஜூலை 31, 2025 அன்று வெளியாகவுள்ள படம் கிங்டம். இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய விஜய் தேவரகொண்டா ரசிகர்களைப் பார்த்து நீங்கள் எனக்கு கடவுள் கொடுத்த வரம் என்று பேசினார்.

விஜய் தேவரகொண்டா - சத்யதேவ் - பாக்யஸ்ரீ போர்ஸ்
ஜெர்ஸி படத்தின் மூலம் பிரபலமான கௌதம் தின்னனுரி இயக்கியுள்ள படம் கிங்டம் (Kingdom). இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா (Vijay Devarakonda) ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்க, சத்யதேவ் ஹீரோவின் சகோதரர் வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான டிரெய்லர், டீசர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதன் காரணமாக இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்திருக்கின்றன. கூடுலாக அனிருத்தின் இசையும் படத்துக்கு பக்கபலமாக அமைந்துள்ளன. இந்த நிலையில் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிழ்ச்சியில் ஸ்டைலான உடையில், அழகான தோற்றத்துடன், பின்னணி பாடலுடன் மேடைக்குள் நுழைந்த விஜய் தேவரகொண்டாவுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்தனர். அவர் நுழைந்ததும் அரங்கம் கரகோஷங்களால் அதிர்ந்தது.
நாயகி பாக்யா ஸ்ரீ போர்ஸ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் மற்றும் குழுவினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். விஜய்யின் வருகை நிகழ்வின் சிறப்பம்சமாக இருந்ததாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்தப் படம் ஜூலை 31 ஆம் தேதி திரையரங்குகளில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
இதையும் படிக்க : எங்களை யாராலும் தடுக்க முடியாது… கிங்டம் நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா அதிரடி!
வைரலாகும் ஹீரோ விஜய் தேவரகொண்டாவின் பேச்சு
ஹைதராபாத்தில் நடந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய விஜய் தேவரகொண்டா, இன்னும் 2 நாட்களே இருக்கிறது. உங்களை விரைவில் திரையரங்குகளில் சந்திக்கிறேன். பயமாக இருக்கிறது. அதே நேரம் மன நிறைவும் இருக்கிறது. ஒரு குழுவாக நாங்கள் உருவாக்கியிருக்கும் படத்தை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது. படம் பார்த்துவிட்டு நீங்கள் தான் சொல்ல வேண்டும். உங்கள் அனைவரை பற்றியும் பேசலாம் என இருக்கிறேன். நீங்கள் எனக்கு கடவுள் கொடுத்த வரம். ரொம்ப நேரமாக எங்களுக்கு காத்திருக்கிறீர்கள். படம் வெற்றிபெற்றாலும், தோற்றாலும் அதே அன்பு கொடுக்கிறீர்கள். என்று பேசினார்.
இதையும் படிக்க : டிக்கெட் முன்பதிவில் சாதனை.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்துக்கு அமோக வரவேற்பு!
திருப்பதியில் சமீபத்தில் வெளியிடப்பட்ட டிரெய்லருக்குக் கிடைத்த வரவேற்பைப் பற்றி அவர் பேசுகையில், “டிரெய்லரைப் பார்த்த பிறகு, பல ரசிகர்கள், ‘இந்த முறை நாங்கள் வெற்றி பெறுவோம், இந்த முறை நமக்கு வெற்றி உறுதி என்று கருத்து தெரிவித்தனர். ஒருவர் கூட உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று சொல்லவில்லை. எல்லோரும் ‘நாங்கள் இருக்கிறோம்’ என்று சொல்வதைப் பார்த்தபோது என் இதயம் பூரித்தது. என்றார். அவரது பேச்சு ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.