நான் இப்படி ஒரு இடத்தில் நிற்பேன் என்று நினைக்கவே இல்லை – 29 பட விழாவில் எமோஷ்னலாக பேசிய நடிகர் விது

Actor Vidhu Speech: தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகர் விது. இதனைத் தொடர்ந்து தற்போது 29 என்ற படத்தில் நாயகனாக நடித்து உள்ளார். இது தொடர்பாக அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நான் இப்படி ஒரு இடத்தில் நிற்பேன் என்று நினைக்கவே இல்லை - 29 பட விழாவில் எமோஷ்னலாக பேசிய நடிகர் விது

நடிகர் விது

Published: 

29 Apr 2026 17:14 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ரெட்ரோ. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். இதில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து இருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து இருந்த நிலையில் நடிகர் விது வில்லனாக நடித்து இருந்தார். மிகவும் வித்யாசமான வில்லனாக இவர் நடித்து இருந்த காரணத்தால் இவரின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. மேலும் நடிகர் விது அவரது நடிப்பிற்காக பலரின் பாராட்டையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் வில்லனாக கலக்கிய விது அடுத்ததாக நாயகனாக நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி அவர் இயக்குநர் ரத்னகுமார் எழுதி இயக்கி உள்ள 29 படத்தில் நாயனாக அறிமுகம் ஆகிறார்.

முன்னதாக இயக்குநர் ரத்னகுமார் எழுதி இயக்கிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது உருவாகி உள்ள 29 படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் படத்தில் நடிகர் விது உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் வருகின்ற 8-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் 29 படத்தின் விழாவில் நடிகர் விது பேசியது வைரலாகி வருகின்றது.

29 பட விழாவில் எமோஷ்னலாக பேசிய நடிகர் விது:

வாழ்க்கை இன்று ஒரு முழுச் சுற்றை நிறைவு செய்திருக்கிறது. நான் இந்த நிலையை அடைவேன் என்று ஒருபோதும் கற்பனை செய்திருக்கவில்லை. இதற்கெல்லாம் தொடக்கமாக அமைந்தது, 14 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர் கார்த்திகேயனுடன் நான் நடத்திய ஒரு உரையாடலே ஆகும். ‘29’ திரைப்படத்தில் பணியாற்றியது, ஒரு குடும்பத்தின் அங்கமாக இருப்பதைப் போன்ற உணர்வை அளித்தது. அப்படத்தின் பணிகள் நிறைவடைந்தபோது, ​​நாங்கள் அனைவரும் ஒருவிதமான கனத்தையும் உணர்ச்சிப் பெருக்கையும் சுமந்திருந்தோம். ரத்னா ‘பேரன்பின்’ (ஆழ்ந்த கருணையின்) வடிவமாகத் திகழ்கிறார். அந்தச் சாராம்சம் இத்திரைப்படத்தில் மிக வலிமையாகப் பிரதிபலிக்கும். இது ஒரு தீவிரமான, உணர்ச்சிகள் நிறைந்த அனுபவமாக அமையப்போகிறது என்று நடிகர் விது தெரிவித்துள்ளார்.

Also Read… பர்த்டே ஸ்பெஷல்.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே!

இணையத்தில் வைரலாகும் நடிகர் விது பேச்சு:

Also Read… Samantha: அவள் உலக அழகியே.. ரசிகர்களுடன் தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய சமந்தா – வைரலாகும் போட்டோஸ்!

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..