தன்னை தாக்கியதாக நடிகர் உன்னி முகுந்தன் மீது அவரது மேனேஜர் புகார்!

Actor Unni Mukundan: தமிழ் சினிமாவில் நடிகர் சூரி நடிப்பில் வெளியான கருடன் படத்தின் மூலம் ரசிகரக்ளிடையே நன்கு பிரபலம் ஆனவர் உன்னி முகுந்தன். இந்த நிலையில் உன்னி முகுந்தன் அவருடைய மேனேஜரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் ஒன்று எழுந்துள்ளது.

தன்னை தாக்கியதாக நடிகர் உன்னி முகுந்தன் மீது அவரது மேனேஜர் புகார்!

நடிகர் உன்னி முகுந்தன்

Published: 

27 May 2025 12:43 PM

மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் உன்னி முகுந்தன் (Actor Unni Mukundan). இவர் சமீபத்தில் தனது மேனேஜர் விபினை தாக்கியதாக அவர் புகார் அளித்துள்ளார். அதன்படி விபின் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது, கடந்த 23-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான படம் நரிவேட்ட. இந்தப் படத்தைப் பார்த்த விபின் படத்தையும் டொவினோ தாமஸையும் பாராட்டி தனது முக நூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவைப் பார்த்த உன்னி முகுந்தன் விபினின் குடியிருப்பிற்கு சென்றுள்ளார். அங்கு பார்க்கிங் ஏரியாவில் வைத்து விபினை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக நடிகர் உன்னி முகுந்தனிடம் மேனேஜராக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் குறித்து உன்னி முகந்தன் மேனேஜர் கூறியது:

செய்தியாளர்களிடன் பேசிய உன்னி முகுந்தனின் மேனேஜர் விபின் கூறியதாவது, நான் ஆறு வருடங்களாக அவரிடம் பணியாற்றி வருகிறேன். அவர் என்னை பல முறை கிண்டல் செய்த போதிலும் என்னை மரியாதை குறைவாக நடத்திய போதிலும் நான் அங்கேயே வேலை செய்து வந்தேன்.

மார்கோ படத்திற்கு பிறகு பெரிய அளவில் நல்ல படங்கள் எதுவும் கிடைக்காத காரணத்தாலும் உன்னி முகுந்தின் நடிப்பில் இறுதியாக வெளியான கெட் செட் பேபி படமும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை சந்தித்ததால் அவர் சமீப காலமாக மன உழைச்சலில் இருந்ததாகவும் அவரது மேனேஜர் விபின் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

நடிகர் உன்னி முகுந்தனின் இன்ஸ்டா பதிவு:

மேலும், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆரம்பத்தில் உன்னி முகுந்தனை இயக்குநராக அறிமுகமாக இருந்த படத்தைத் தயாரிக்க ஒப்புக்கொண்டிருந்தாலும், பின்னர் அவர்கள் விலகினர். இவை அனைத்தும் உன்னி முகுந்தனை மிகுந்த மன உழைசசலுக்கு தள்ளியது. இதன் காரண்மாக அவர் அடிக்கடி தனது கோபத்தை தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மீது காட்டுவார்.

இவரின் இந்த மாதிரியான செயல் காரணமாகவே அவருடன் ஒரு காலத்தில் பணிபுரிந்த பலர் இனி உன்னி முகுந்தனுடன் பணிபுரிய மாட்டோம் என்று விலகி விட்டனர். மேலும் அவரின் இந்த மாதிரியான செயல்கள் அனைத்தையும் நான் எவ்வளவு காலம் தாங்க முடியும் என்றும் உன்னி முகுந்தின் மேனேஜர் விபின் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.