தீவிர உடற்பயிற்சி, நியூ போட்டோ ஷூட் – நடிகர் சூரியின் வைரல் வீடியோ!

Actor Soori: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக கலக்கி வருகிறார் நடிகர் சூரி. தொடர்ந்து நாயகனாக நடித்து வரும் நடிகர் சூரி தற்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோவின் க்ளிம்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தீவிர உடற்பயிற்சி, நியூ போட்டோ ஷூட் - நடிகர் சூரியின் வைரல் வீடியோ!

நடிகர் சூரி

Published: 

18 Oct 2025 15:22 PM

 IST

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் பெயரிடப்படாதா கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் சூரி (Actor Soori) ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி நடிகராக உச்சத்தைத் தொட்டார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து நடிகர் சூரி நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்த நடிகர் சூரி ஒரு போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அதில் அவர் தீவிர உடபயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக காட்டி இருந்தது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து காமெடி நடிகராக நடித்து வந்த நடிகர் சூரி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் ஒன்று படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார்.

இந்தப் படத்தில் நடிகர் சூரியின் நடிப்பைப் பாராட்டிய தமிழ் ரசிகர்கள் அவரை நாயகனாகவே ஏற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாகவே தொடர்ந்து நடிகர் சூரி நடித்து வருகிறார். அதன்படி இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மாமன். நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து சீரியசான கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த சூரி மாமன் படத்தில் தான் காமெடியை கையிலெடுத்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கெத்தா… ஸ்டைலா… நடிகர் சூரியின் நியூ லுக்:

மாமன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது மண்டாடி படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சூரி. அந்தப் படத்தின் தமிழ் மொழியில் நாயகனாகவும் தெலுங்கு மொழியில் வில்லனாகவும் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் பணிகளில் நடிகர் சூரி தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது தனது புதிய போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… சட்டம் பொண்ணுங்க சொன்னா நம்பும்பா… ஆண்பாவம் பொல்லாதது ட்ரெய்லர் இதோ!

நடிகர் சூரி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு ரஜினிகாந்தை இயக்கும் பிரபல இயக்குநர்? இணையத்தை கலக்கும் தகவல்