ரசிகர்களின் கோரிக்கைக்கு இணங்க… நடிகர் சிம்புவின் நியூ லுக்

Actor Silambarasan: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் சிம்பு சமீபத்தில் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ரசிகர்களின் கோரிக்கைக்கு இணங்க... நடிகர் சிம்புவின் நியூ லுக்

சிம்பு

Published: 

30 Nov 2025 18:35 PM

 IST

தமிழ் சினிமாவில் கலைத்தாயின் செல்லக் குழந்தை என்று பிரபலங்களும் ரசிகர்களும் கூறுபவர் சிலம்பரசன் தான். இவர் கைக் குழந்தையாக இருக்கும் போதே சினிமாவில் நடிக்கத் தொடங்கிவிட்டார். நடிப்பு மட்டும் இன்றி, பாடல்கள் பாடுவது, பாடல்களை எழுதுவது, படங்களை இயக்குவது மற்றும் நடனம் ஆடுவது என ஒரு ஆல் ரவுண்டராக வலம் வருகிறார் நடிகர் சிலம்பரசன். சிலம்பரசன் 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகர். இவரது ரசிகர்களின் எண்ணிக்கை அதிக அளவில் 90ஸ் கிட்ஸ்களே இருப்பார்கள். அதற்கு காரணம் 90களில் பிறந்த குழந்தைகள் அதிக அளவில் சிம்பு குழந்தை நட்சத்திரமாக நடித்தப் படங்களை தொலைக்காட்சிகளில் பார்த்து வளர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 90ஸ் கிட்ஸ்கள் மட்டும் இன்றி அனைத்து வயதினரும் சிம்புவின் ரசிகர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவரது சினிமா வாழ்க்கையில் இடையில் சில ஆண்டுகள் சிறப்பானதாக இல்லை என்று சொல்லலாம். உடல் எடை அதிகரித்து சிம்பு காணப்பட்ட நிலையில் தொடர்ந்து சினிமா வட்டாரங்களில் இவர் மீது நெகட்டிவான விமர்சனங்கள் எழுந்து வந்தது. மேலும் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான படங்களும் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது அவரது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி வந்தது. எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் தங்களது தலைவன் கம்பேக் கொடுப்பான் என்று சிம்புவின் ரசிகர்கள் நம்பிக்கை வைத்து இருந்தனர். அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக உடல் எடையை குறைத்து ஒரு மாஸான கம்பேக்கை நடிகர் சிம்பு கொடுத்தார்.

இணையத்தில் வைரலாகும் நடிகர் சிம்புவின் நியூ லுக்:

அதனைத் தொடர்ந்து நடிகர் சிம்புவின் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது நடிகர் சிம்பு இயக்குநர் வெற்றிமாறன் உடன் அரசன் படத்திற்காக கூட்டணி வைத்துள்ளார். இது தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சிம்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களிடையேஎ வைரலாகி வருகின்றது.

Also Read… ரஜினிகாந்தின் 75-வது பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய சர்ப்ரைஸ்!

நடிகர் சிம்பு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தலைவர் 173-க்கு நோ… சுந்தர் சி இயக்கும் படத்தின் அப்டேட் இதோ

Related Stories
ஆதார் அட்டைதாரர்களே.. இந்தத் தவறுகள் உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்துவிடும்.. அரசு எச்சரிக்கை!!
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!
"பாட்டி.. மொத்த சமோசாவும் காலி".. ராணுவ வீரர்களின் செயலால் நெகிழ்ந்த நெட்டிசன்கள்!!
‘கழுத்தை அறுத்த சீன மாஞ்சா கயிறு’.. உயிர்தப்பிய மதபோதகர்..