Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ் தேதிய லாக் செய்த படக்குழு!

Actor Pradeep Ranganathan: நடிகர் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான டிராகன் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ் தேதிய லாக் செய்த படக்குழு!
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி Image Source: Instagram
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 12 May 2025 12:01 PM

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Actor Pradeep Ranganathan) நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தப் படத்தில் பிரப்தீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிகை கிருதி ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, கௌரி ஜி. கிஷன், மிஷ்கின், சீமான், ஆனந்தராஜ், சுனில் ரெட்டி மற்றும் ஷா ரா என பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் தயாரிப்பு நிறுவனமான ரௌடி பிக்சர்ஸ் உடன் இணைந்து செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் இசையமைத்துள்ளார். படத்தின் அறிவிப்பு தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

முன்னதாக இந்தப் படம் கடந்த 2019-ம் ஆண்டு பெயரிடப்படாமல் அறிவிக்கப்பட்டது. அதில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது என்று செய்திகள் வெளியாகின. ஆனால் படத்தின் பட்ஜெட்டால் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக அந்த கூட்டணி கைவிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த 2023-ம் ஆண்டு நடிகர் பிரதீப் ரங்கநாதன் இந்தப் படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. மேலும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இது தொடர்பான அறிவிப்பி செப்டம்பர் மாதம் 2023-ம் ஆண்டு வெளியிட்டது. மேலும் 2023-ம் ஆண்டு டிசம்பரில் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டது.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு 2024-ம் ஆண்டு தொடங்கி ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடித்தது. இதுகுறித்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து படத்தின் அப்டேட்களை தொடர்ந்து படக்குழு வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது படத்தின் வெளியீட்டு தேதியைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 18-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முன்னதாக நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ட்ராகன் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பஹல்காம் தாக்குதல் டூ போர் நிறுத்தம்.. பிரதமர் மோடி இன்று உரை!
பஹல்காம் தாக்குதல் டூ போர் நிறுத்தம்.. பிரதமர் மோடி இன்று உரை!...
ரஜினியுடன் படம் பண்ணக் காரணமே விஜய் அண்ணாதான் - லோகேஷ் கனகராஜ்!
ரஜினியுடன் படம் பண்ணக் காரணமே விஜய் அண்ணாதான் - லோகேஷ் கனகராஜ்!...
சிவ தாண்டவம் இசை ஒலிக்க நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் விளக்க கூட்டம்!
சிவ தாண்டவம் இசை ஒலிக்க நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் விளக்க கூட்டம்!...
பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஆதரித்ததால் சண்டை - இந்திய இராணுவம்
பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஆதரித்ததால் சண்டை - இந்திய இராணுவம்...
அந்த சிக்கலான நேரத்தில் நடிகர் விஜய் சேதுபதிதான் உதவினார்...
அந்த சிக்கலான நேரத்தில் நடிகர் விஜய் சேதுபதிதான் உதவினார்......
உலகம் ஒருபோதும் மறக்காது! கோலி டெஸ்ட் போட்டியில் படைத்த சாதனைகள்!
உலகம் ஒருபோதும் மறக்காது! கோலி டெஸ்ட் போட்டியில் படைத்த சாதனைகள்!...
சூர்யா மேல் ஏன் வன்மம்? ரசிகருக்கு கார்த்திக் சுப்பராஜ் பதில்
சூர்யா மேல் ஏன் வன்மம்? ரசிகருக்கு கார்த்திக் சுப்பராஜ் பதில்...
டிடி நெக்ஸ்ட் லெவல் பாடல் - சந்தானத்தின் மீது பாஜகவினர் புகார்
டிடி நெக்ஸ்ட் லெவல் பாடல் - சந்தானத்தின் மீது பாஜகவினர் புகார்...
தொடர்ந்து நம்பர் ஒன்! டெஸ்ட் கேப்டனாக கோலி படைத்த சாதனைகள்!
தொடர்ந்து நம்பர் ஒன்! டெஸ்ட் கேப்டனாக கோலி படைத்த சாதனைகள்!...
கண் புற்றுநோயின் எச்சரிக்கை: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
கண் புற்றுநோயின் எச்சரிக்கை: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!...
விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவு!
விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவு!...