Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிரதீப் ரங்கநாதனின் ’டியூட்’ படத்தின் டைட்டில் என்னுடையது… இயக்குநர் குற்றச்சாட்டு

இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக கலக்கி வருபவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படத்தின் டைட்டிலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. ட்யூட் என்று பெயர் வைக்கப்பட்ட அந்தப் படத்தின் பெயர் தன்னுடையது என்று இயக்குநர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதீப் ரங்கநாதனின் ’டியூட்’ படத்தின் டைட்டில் என்னுடையது… இயக்குநர் குற்றச்சாட்டு
டியூட்Image Source: twitter
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 14 May 2025 12:39 PM

பிரபல இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் (Pradeep Ranganathan) புது படம் குறித்த அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் பெயர் ட்யூட் என்று தெரிவித்தனர். இதனை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் இந்த பெயரில் புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. அது என்ன என்றால் இந்த படத்தின் பெயரான ட்யூட் தெலுங்கு சினிமாவில் இயக்குநரும் நடிகருமான தேஜ் கடந்த ஆண்டு அறிவித்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் பிரதீப் ரங்கநாதனின் படத்திற்கு இந்த பெயர் வைத்திருப்பதைப் பார்த்து தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அந்த நிறுவனத்திடம் தான் இதுகுறித்து முறையிட்டதாகவும், அவ்வளவு பெரிய நிறுவனத்தை எதிர்த்துப் போராடும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களிடம் இருந்து நல்ல பதில் வரும் என்று நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டியூட் படம் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு:

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் தற்போது ரிலீஸிற்கு காத்திருக்கும் படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். கிருதி ஷெட்டி நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கௌரி ஜி. கிஷன், யோகி பாபு, மிஷ்கின், ஆனந்தராஜ், ஷா ரா, சுனில் ரெட்டி மற்றும் சீமான் ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்த படக்குழு போஸ்ட் புரடெக்‌ஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த மே மாதம் 12-ம் தேதி 2025-ம் ஆண்டு படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். அதில் படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 18-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ் சினிமாவில் இயக்குநராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது நடிகராக கலக்கி வரும் பிரதீப் ரங்கநாதனுக்கு தொடர்ந்து படங்கள் வரிசைக்கட்டி வருகின்றது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான் டிராகன் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வராவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

38 மாதங்கள்! 1152 நாட்கள்! தொடர்ந்து நம்பர் 1.. ஜடேஜா புதிய சாதனை
38 மாதங்கள்! 1152 நாட்கள்! தொடர்ந்து நம்பர் 1.. ஜடேஜா புதிய சாதனை...
ட்ரோன்களை அழிக்க இராணுவத்தில் புதிதாக களமிறங்கும் ’பார்கவாஸ்த்ரா’
ட்ரோன்களை அழிக்க இராணுவத்தில் புதிதாக களமிறங்கும் ’பார்கவாஸ்த்ரா’...
எனது மகனுக்கு படங்களை இயக்கவேண்டும் என்று ஆசை - சந்தானம்
எனது மகனுக்கு படங்களை இயக்கவேண்டும் என்று ஆசை - சந்தானம்...
10 ஆண்டுகளுக்கு பிறகு லோகோவை மாற்றிய கூகுள் !
10 ஆண்டுகளுக்கு பிறகு லோகோவை மாற்றிய கூகுள் !...
பைக்கில் கிளட்ச் பிரச்னையா? - ஈஸியா கண்டுபிடிக்க இதோ டிப்ஸ்!
பைக்கில் கிளட்ச் பிரச்னையா? - ஈஸியா கண்டுபிடிக்க இதோ டிப்ஸ்!...
விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் ரிலீஸை ஒத்திவைத்த படக்குழு...
விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் ரிலீஸை ஒத்திவைத்த படக்குழு......
ரூ100 கோடி நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்திற்கு நோட்டீஸ்!
ரூ100 கோடி நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்திற்கு நோட்டீஸ்!...
பல்லவன் அதிவிரைவு ரயில் நாளை முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும்!
பல்லவன் அதிவிரைவு ரயில் நாளை முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும்!...
இந்தியா பதிலடி சரியே! பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானி குரல்..!
இந்தியா பதிலடி சரியே! பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானி குரல்..!...
ஆர்ஆர்ஆர் பட விழாவில் ரசிகர்களால் கடுப்பான ஜூனியர் என்டிஆர்
ஆர்ஆர்ஆர் பட விழாவில் ரசிகர்களால் கடுப்பான ஜூனியர் என்டிஆர்...
அடிச்சது யோகம்.. இந்த 6 ராசிக்கு சொந்த வீடு கனவு நிறைவேறும்!
அடிச்சது யோகம்.. இந்த 6 ராசிக்கு சொந்த வீடு கனவு நிறைவேறும்!...