இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் பேபி கேர்ள் படத்தின் ட்ரெய்லர்
Baby Girl Movie Official Trailer | மலையாள சினிமாவில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் தற்போது அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள பேபி கேர்ள் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

பேபி கேர்ள்
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவரது நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் நிவின் பாலி நடிப்பில் முன்னதாக திரையரங்குகளில் வெளியான பிரேமம் என்ற படம் அவரை மலையாள திரையுலகை தாண்டி தென்னிந்திய திரையுலகில் உள்ள ரசிகர்களிடையே அதிக அளவில் பிரபலப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் நிவின் பாலிக்கு மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா முழுவதும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நடிகர் நிவின் பாலி நடிப்பில் பெரிய அளவில் படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் படங்கள் தொடர்ந்து வெளியாகத் தொடங்கியுள்ளது.
அதன்படி இறுதியாக நடிகர் நிவின் பாலி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் சர்வம் மாயா. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இது மட்டும் இன்றி நடிகர் நிவின் பாலி முன்னணி வேடத்தில் நடித்த பார்மா என்ற இணையதள தொடர் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியானது. அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் பேபி கேர்ள் படத்தின் ட்ரெய்லர்:
இந்த நிலையில் தற்போது நடிகர் நிவின் பாலி நடிப்பில் உருவாகி உள்ள படம் பேபி கேர்ள். இந்தப் படத்தை இயக்குநர் அருண் வர்மா எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மேஜிக் ஃப்ரேம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் நிவின் பாலி உடன் இணைந்து நடிகர்கள் லிஜோமோல், சங்கீத் பிரதாப் மற்றும் அபிமன்யு திலகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற 23-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… காதலர் தினத்தில் மிருணாள் தாக்கூரை திருமணம் செய்யும் தனுஷ்? இணையத்தில் வைரலாகும் தகவல்
நடிகர் நிவின் பாலி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Trailer Crossed 1 Million Views & Trending Now On YouTube.
Trailer :- https://t.co/0HNeNRT3Up#BabygirlMovie In Theatre From Jan 23rd.#BabyGirl #ArunVarma #ListinStephen #Boby & #Sanjay #MagicFrames #SouthFramesEntertainment pic.twitter.com/ufVtNUDe1i
— Nivin Pauly (@NivinOfficial) January 17, 2026
Also Read… கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்