இந்தியாவிற்குதான் முன்னுரிமை… கலை காத்திருக்கட்டும் – தக் லைஃப் படத்தில் இசை வெளியீட்டு விழாவை ஒத்திவைத்த கமல் ஹாசன்!

Actor Kamal Haasan: இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் சூழல் நிலவி வரும் நிலையில் இந்தியாவிற்குதான் முன்னுரிமை என்றும் கலை காத்திருக்கட்டும் என்று கூறி தக் லைஃப் படத்தில் இசை வெளியீட்டு விழாவை நடிகர் கமல் ஹாசன் ஒத்தி வைத்துள்ளார். இது தொடர்பான அறிக்கையை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவிற்குதான் முன்னுரிமை... கலை காத்திருக்கட்டும் - தக் லைஃப் படத்தில் இசை வெளியீட்டு விழாவை ஒத்திவைத்த கமல் ஹாசன்!

கமல் ஹாசன்

Updated On: 

09 May 2025 17:03 PM

இயக்குநர் மணிரத்னம் (Maniratnam) இயக்கத்தில் உருவாகி வரும் படம் தக் லைஃப். இந்தப் படத்தில் நடிகர்கள் கமல் ஹாசன் (Actor Kamal Haasan) மற்றும் சிலம்பரசன் இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ், சான்யா மல்கோத்ரா, நாசர், பங்கஜ் திரிபாதி, வடிவுகரசி என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். 1987-ம் ஆண்டு வெளியான நாயகன் படத்திற்கு பிறகு நடிகர் கமல் ஹாசன் மற்றும் இயக்குநர் மணிரத்னத்தின் கூட்டணி அமைந்ததால் இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகின்றது. இந்தப் படத்திற்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தப் படத்தில் இருந்து ஜிங்குச்சா என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டது.

திருமணத்தில் நடக்கும் நிகழ்வுகள் அந்த பாடலில் அங்கு அங்கு காட்சிப்படுத்தப்பட்டதால் இயக்குநர் மணிரத்னம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் முன்னதாக வெளியான கல்யாணப் பாடல்களைப் போட இதுவும் சிறப்பாக உள்ளது என்று ரசிகர்கள் பாடலைக் கொண்டாடித் தீர்த்தனர்.

பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. சமூக வலைதளத்தில் இந்தப் பாடலுக்கு பலரும் நடனம் ஆடி வீடியோ பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தக் லைஃப் படம் ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகின்ற 16-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு நடத்த படக்குழு திட்டமிட்டு இருந்தது.

ஆனால் தற்போது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிழவுவதால் இந்த இசை வெளியீட்டு விழாவை ஒத்தி வைப்பதாக நடிகர் கமல் ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கையுடன் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு இந்தியாவிற்குதான் முன்னுரிமை. கலை காத்திருக்கட்டும் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

நடிகர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

மேலும் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, நமது நாட்டின் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முன்னதாக மே மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஒத்தி வைக்க முடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், நமது தாய்நாட்டைப் பாதுகாப்பதில் நமது ராணுவ வீரர்கள் தளராத துணிச்சலுடன் போராடிவரும்போது, ​​இது கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல, அமைதியான ஒற்றுமைக்கான நேரம் என்று நான் நம்புகிறேன். அதனால் இசை வெளியீட்டு விழாவின் புதிய தேதி சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.