ரசிகர்களின் கட்டளைக்கு ஏற்ப… இணையத்தில் வைரலாகும் கலகல பேச்சு

Actor Dhanush talks about Vadachennai part 2 movie: நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கர. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பேசியது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ரசிகர்களின் கட்டளைக்கு ஏற்ப... இணையத்தில் வைரலாகும் கலகல பேச்சு

தனுஷ்

Published: 

20 Apr 2026 11:02 AM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கர. இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதி இயக்கி உள்ள இந்தப் படம் வருகின்ற 31-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்து உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் பாடல்களும் தொடர்ந்து வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்த நிலையில் நேற்று படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பேசினர். மேலும் இந்த விழாவில் நடிகர் தனுஷ் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரசிகர்கள் கொடுத்த கட்டளைக்காக அதை செய்துள்ளேன்:

அதன்படி அந்த விழாவில் பேசிய நடிகர் தனுஷ் கடந்த முறை அனைவரும் என்னை ஃபங்க் வைக்க சொல்லி கட்டளையிட்டீங்க. ஃப… ஃப… ஃபங்க். அப்பறம் நானே சொல்லிட்றேன் நீங்க எல்லாம் கேட்குறதுக்கு முன்னாடி. வட சென்னை 2 படம் நிச்சயமாக வரும், சீக்கிரமா வரும், சத்தமா வரும், ரொம்ப பக்கத்துல வந்துருச்சு, அன்புவின் எழுச்சி பெருசாகும் என்றும் நடிகர் தனுஷ் அந்த விழாவில் பேசியுள்ளார். இது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… எனது முந்தையப் படங்களை விட 10 மடங்கு கருப்பு சிறப்பாக இருக்கும் – ஆர்.ஜே.பாலாஜி

இணையத்தில் வைரலாகும் நடிகர் தனுஷின் பேச்சு:

Also Read… கர படத்தில் தெலுங்கு டப்பிங் பேசியது குறித்து கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்

Follow Us
Related Stories
இயக்குநர் வெங்கி அட்லூரி கதை சொல்லும் போது இதனை மிஸ் செய்ய கூடாது என்று நினைத்தேன் – மமிதா பைஜூ
பெல்ஜியத்தில் கார் ரேஸிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பிய அஜித் குமார் – ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
கருப்பு படத்தின் புரமோஷன் பணிகளில் களமிறங்கிய படக்குழு  – வைரலாகும் போட்டோஸ்
Karthi: நா லவ் பண்ணக்கூடாதுனு வீட்ல மிரட்டுனாங்க.. நடிகர் கார்த்தி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
சம்மர் வெக்கேஷன் ஸ்டார்ட் ஆகிடுச்சு… குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான இந்த ஃபைண்டிங் நீமோ படத்தை மிஸ் செய்யாதீர்கள்
அஜித் பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸாகும் வாலி… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..