முதல் படம் செம ஹிட்.. இரண்டாவது படத்துக்கு 11 ஆண்டுகள் இடைவெளி.. மீண்டும் களமிறங்கும் தெகிடி இயக்குனர்!

Actor Ashok Selvan: தமிழ் சினிமாவில் தற்போது மக்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவராக அசோக் செல்வன் உள்ளார். ஆனால் இதற்கு எல்லாம் காரணம் இவர் முன்னதாக நடித்தப் படங்களின் வெற்றிதான். அந்த வரிசையில் முதலில் இவரது வெற்றிப் படமாக இருப்பது தெகிடி என்றே சொல்லலாம்.

முதல் படம் செம ஹிட்.. இரண்டாவது படத்துக்கு 11 ஆண்டுகள் இடைவெளி.. மீண்டும் களமிறங்கும் தெகிடி இயக்குனர்!

அசோக் செல்வன், ரமேஷ்

Updated On: 

26 May 2025 12:04 PM

 IST

நடிகர் அசோக் செல்வன் (Actor Ashok Selvan) தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் இந்தப் படத்தின் நாயகன்களாக நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் கடந்த 24-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பேசினர்.

இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல் ஹாசன் படத்தில் தன்னுடன் பணியாற்றிய அனைத்து நடிகர்கள் குறித்தும் தனித் தனியாக புகழ்ந்து பேசினார். அப்போது அசோக் செல்வன் குறித்து பேசும் போது நடிகர் நாசருடன் ஒப்பிட்டு அவரை மாதிரி நல்ல திறமையான நடிகர் என்று தெரிவித்தார். நடிப்பில் அசோக் செல்வனுக்கு இருக்கும் ஆர்வம் குறித்தும் திறமை குறித்தும் வெகுவாகப் பாராட்டினார்.

அசோக் செல்வனின் இன்ஸ்டா பதிவு:

தெகிடி இயக்குநருடன் மீண்டும் கைகோர்க்கும் அசோக் செல்வன்:

இந்த நிலையில் நடிகர் அசோக் செல்வனின் அடுத்தப் படம் குறித்த அப்டேட் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 2013-ம் ஆண்டு இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்த சூது கவ்வும் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார் அசோக் செல்வன்.

அதனைத் தொடர்ந்து பீட்சா 2 படத்தின் நாயகனாக நடித்தார். மேலும் அசோக் செல்வன் நாயகனாக நடித்த இரண்டாவது படம் தான் தெகிடி. இந்தப் படத்தை இயக்குநர் ரமேஷ் இயக்கி இருந்தார். 11 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தப் படம் வித்யாசமான கதையம்சத்தை கொண்டிருந்ததால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் இந்த தெகிடி படத்திற்கு பிறகு இயக்குநர் ரமேஷ் எந்தப் படத்தையும் இயக்காமல் இருந்தார். சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் படம் இயக்க முடிவு செய்துள்ளார் இயக்குநர் ரமேஷ். அதன்படி ரமேஷ் இயக்க உள்ள இந்தப் படத்திற்கு அசோக் செல்வன் நாயகனாக நடிக்க உள்ளார். விரைவில் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

Follow Us
Related Stories
ஜெயராம் – பிரித்வி பாண்டியராஜனின் கதாப்பாத்திர போஸ்டர்களை வெளியிட்டது கர படக்குழு
சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு படம் நடைபெறாதா? இணையத்தில் வைரலாகும் தகவல்
கர படத்தில் மமிதா பைஜுவின் கதாப்பாத்திரம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் – இயக்குநர் விக்னேஷ் ராஜா
சூர்யாவின் அந்தப் படம் வாழ்க்கையைப் பற்றி எனது முழு கண்ணோட்டத்தையும் மாற்றியது – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து
நிஜ வாழ்க்கையிலும் பாரு என்னிடம் நடிப்பதாகவே எனக்கு இப்போதும் தோன்றுகிறது – விஜய் சேதுபதி
இயக்குநராக நான் இயக்கிய படங்களைவிட கருப்பு 15 மடங்கு பெரிய படம் – இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..