ஜாய் கிரிஸில்டா எதிர்பார்ப்பது ஒருநாளும் நடக்காது – மாதம்பட்டி ரங்கராஜ்
Madhampatty Rangaraj X Post: தமிழ் சினிமாவில் நடிகராகவும் பிரபலமான சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றியதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா புகார் அளித்தார். இதனை எதிர்த்து மாதம்பட்டி ரங்கராஜ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மாதம்பட்டி ரங்கராஜ்
கோலிவுட் சினிமாவில் பல பிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருபவர் ஜாய் கிரிஸில்டா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் உடன் தனக்கு திருமணம் நடைப்பெற்றதாக புகைப்படங்களை வெளியிட்டார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் இதுகுறித்து மாதம்பட்டி ரங்கராஜ் எந்தவிதமான பதிலும் கூறாமல் இருந்தார். அதனைத் தொடர்ந்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் குழந்தை பிறக்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டார் ஜாய் கிரிஸில்டா. இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாதம்பட்டி ரங்கராஜ் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் எப்படி இந்த திருமணத்தை செய்துக்கொண்டார் என்றும், அந்த திருமணம் செல்லாது என்றும் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் உடன் புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஜாய் கிரிஸில்டா சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து குழந்தையை கொடுத்துவிட்டு ஏமாற்றி விட்டதாகவும் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜ் உடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து வாழ்வதாகவும் அவர் முதல் மனைவியை விட்டு விலகி இருந்ததாக தன்னிடம் கூறி தன்னை திருமணம் செய்துகொண்டார். பின்பு தான் கர்ப்பமானதைத் தொடர்ந்து தன்னுடனான உறவை துண்டித்துவிட்டதாகவும் அந்தப் பேட்டியில் தெரிவித்து வந்தார். தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை ஜாய் கிரிஸில்டா வெளியிட்டு வந்தது சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது.
ஜாய் கிரிஸில்டா எதிர்பார்ப்பது ஒருநாளும் நடக்காது:
தொடர்ந்து தன்னை குறித்து ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா தவறான வதந்திகளைப் பரப்பி வருவதாகவும் அவர் இனி அப்படி செய்யக்கூடாது என்று மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை தொடர்ந்து நடைப்பெற்று வரும் நிலையில் தொடர்ந்து ஜாய் கிரிஸில்டா சமூக வலைதளப் பக்கங்களில் மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து பதிவுகளை வெளிட்டுக்கொண்டே இருக்கிறார்.
இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றும் நீதிமன்றத்திற்கு வெளியே ஜாய் கிரிஸில்டா நினைப்பதற்கு தான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… டீசல் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது – வைரலாகும் போஸ்ட்
மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#MadhampattyRangaraj pic.twitter.com/ILrlEOfebs
— Madhampatty Rangaraj (@MadhampattyRR) October 15, 2025
Also Read… தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் முன்னணி நடிகர்களின் படங்களின் அப்டேட்