காலில் காயத்துடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் அஜித் குமார் – என்ன நடந்தது?
Actor Ajith Kumar: நேற்று ஏப்ரல் மாதம் 29-ம் தேதி 2025-ம் ஆண்டு டெல்லியில் பத்ம பூஷன் விருது விழாவை முடித்துவிட்டு சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் அஜித் குமார் கூட்ட நெரிசலில் சிக்கியதால் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அரசு நடிகர் அஜித் குமாருக்கு (Ajith Kumar) பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டதில் இருந்தே தொடர்ந்து அவர் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். அது மட்டும் இன்றி இந்த ஆண்டு அவரது நடிப்பில் வெளியான படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சமீபத்தில் 10-ம் தேதி ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்தப் படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சதிரன் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார் உடன் இணைந்துந் அடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், சிம்ரன், அர்ஜுன் தாஸ், ஜாக்கி ஷெராப், பிரபு, பிரசன்னா, சுனில், ரெடின் கிங்ஸ்லி என பலர் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் நடிகர் அஜித் குமாருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக புதன்கிழமை 30-ம் தேதி ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். செவ்வாயன்று சென்னை விமான நிலையத்தில் ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கிய பின்னர் நடிகர் அஜித்திற்கு காலில் சிறிய காயம் ஏற்பட்டதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, நடிகர் அஜித் குமாருக்கு நெருக்கமான வட்டாரங்கள் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை விமான நிலையத்தில் ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கிய நடிகர் அஜித் குமாருக்கு அவரது காலில் ஒரு சிறிய காயம் ஏற்பட்டது. எனவே, அவர் பிசியோதெரபிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது.
மேலும் நடிகர் அஜித் குமார் இன்று மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்லது. அவரது உடல்நிலை குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் நெறுங்கிய வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.
சுரேஷ் சந்திரா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The president awarding Ak and greeting Adhik. #AjithKumar pic.twitter.com/QrOHmUx8N3
— Suresh Chandra (@SureshChandraa) April 30, 2025
விமான நிலையத்திலிருந்து பல வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றில், அஜித் அனைவரையும் கூப்பிய கைகளுடன் தனது நன்றியை தெரிவிப்பார். ரசிகர்கள் மட்டும் அவரை வாழ்த்தவில்லை. பத்ம பூஷண் விருது பெற்ற நடிகரைப் பார்க்க விமான நிலையத்திற்கு சென்ற செய்தியாளர்களும் நடிகர் அஜித் குமாரைச் சூழ்ந்திருந்தனர்.
ஜனவரி மாதம், இந்திய அரசு பத்ம விருது பெற்றவர்களின் பெயர்களை அறிவித்தது. விருது பெற்றவர்களில் ஒருவரான அஜித், ஒரு அறிக்கையில் தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும் தனது தந்தையை இந்த தருணத்தில் மிஸ் செய்வதாகவும் நடிகர் அஜித் குமார் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.