நான் ஹீரோவா நடிக்க முக்கிய காரணம் ரஜினிகாந்த் தான் – இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்
Abishan Jeevinth talks about Rajinikanth: டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் மக்களிடம் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா முழுவதும் பிரபலம் ஆனவர் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். இவர் தற்போது நாயகனாக வித் லவ் படத்தில் நடித்துள்ள நிலையில் அதற்கு ரஜினிகாந்த் மிக முக்கிய காரணம் என்று அபிஷன் தெரிவித்துள்ளார்.

அபிஷன் ஜீவிந்த் மற்றும் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குநராக மக்களிடையே அறிமுகம் ஆகி மிகவும் பிரபலம் அடைந்தவர் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். இவர் கடந்த 2025-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்தப் படத்தில் மிகவும் ஆழமான விசயத்தை மக்களிடையே எளிமையாக புரியவைத்தார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். இலங்கையில் இருந்து பொருளாதார பிரச்சனை காரணமாக தமிழகத்திற்கு சட்டவிரோதமாக வரும் குடும்பம் எப்படி இங்கு தங்களது வாழ்க்கையை அமைத்துக்கொண்டனர் என்று இந்தப் படத்தில் மிகவும் அழகாக காட்டியிருப்பார். இவ்வளவு சீரியசான கதையை மிகவும் லேசாக மக்களிடையே எடுத்துக் காட்டியதன் காரணமாக அபிஷன் ஜீவிந்த் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அடுத்ததாக இவர் எந்த நடிகரின் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த போது அவர் நாயகனாக நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகி மக்களிடையே கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து அந்தப் படத்தை அபிஷன் ஜீவிந்தின் நண்பர் மதன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கு வித் லவ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் அபிஷன் ஜீவிந்திற்கு ஜோடியாக நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார். படம் வருகின்ற 06-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படக்குழு படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
நான் ஹீரோவா நடிக்க முக்கிய காரணம் ரஜினிகாந்த் தான்:
அதன்படி அபிஷன் ஜீவிந்த் பேசியபோது, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, எனது அடுத்த இயக்கப் படத்திற்கான திட்டமிடலில் இருந்தேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திப்பதற்கு ஒரு நாள் முன்பு, வித் லவ் படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை ஏற்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னைப் பார்த்ததும் ‘ஹீரோ’ என்று குறிப்பிட்டதும், என் மனதில் இருந்த தயக்கங்கள் நீங்கின. அதன்பிறகு தான் வித் லவ் படத்தில் நடிக்க முழு மனதுடன் இறங்கினேன் என்று அபிஷன் ஜீவிந்த் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… கூலி படத்திற்கு ஏ சென்சார் சான்றிதழ் ஏன்… இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்
இணையத்தில் வைரலாகும் அபிஷன் ஜீவிந்த் பேச்சு:
#Abishan: After #TouristFamily success, I was planning for my next Direction film🎬. A day before meeting Superstar #Rajinikanth, I was in confusion whether should I accept #WithLove Hero offer. Superstar mentioned ‘Hero’ then my insecurities got broken🔥”pic.twitter.com/4wVT8iOKBo
— AmuthaBharathi (@CinemaWithAB) January 28, 2026
Also Read… இயக்குநர் சுதா கொங்கராவின் அடுத்தப் பட நாயகன் இவரா? வைரலாகும் தகவல்