எனக்கு அதில் பிரச்னை இல்லை.. கூலி பட விமர்சனங்களுக்கு ஆமிர் கான் பதில்!
Aamir Khan About Rajinikanth : பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருபவர் அமீர் கான். இவர் சமீபத்தில் வெளியான கூலி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இவரின் வேடத்திற்கு எழுந்த விமர்சனங்கள் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

ஆமிர் கான் மற்றும் ரஜினிகாந்த்
நடிகர் ஆமிர் கான் (Aamir Khan), பாலிவுட்டில் முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். இவரின் தயாரிப்பில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து தற்போது இவர் தமிழ் சினிமாவிலும் காலடி வைத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) நடிப்பில் வெளியான கூலி (Coolie ) படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இந்த படத்தைத் தமிழ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியிருந்த நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனமானது தயாரித்திருந்தது. இந்த படத்தில் நடிகர் ஆமிர் கான் தாஹா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது கதாப்பாத்திரம் குறித்து ரசிகர்களிடையே விமர்சனங்கள் எழுந்தன.
அவ்வளவு பெரிய பாலிவுட் நடிகர், தமிழில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் எனக் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், கூலி படத்தைத் தொடர்ந்து நேர்காணலை ஒன்றில் பேசிய அவர், விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ளார். அது என்ன என்பது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.
இதையும் படிங்க : விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் படத்தின் ரீ ரிலீஸில் தேம்பி அழுத பிரேமலதா
கூலி பட தனது கதாபாத்திரத்தின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த ஆமிர் கான் :
கூலி படம் குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த ஆமிர் கான், “ஆமாம், நான் கூலி திரைப்படத்தில், ரஜினிகாந்திற்கு பீடி பற்றவைப்பதுதான் எனது வேலை. அதை செய்வதில் எனக்கு எந்தவித பிரச்னைகளும் இல்லை. நான் தீவிரமான ரஜினிகாந்த் ரசிகன். அவருடன் திரைப்படத்தில் இணைந்து நடிப்பதே எனக்குப் பெருமைதான்” என்று அந்த விமர்சனங்களுக்கு விளக்கம் கொடுத்திருந்தார். தற்போது இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : தனி ஆள் இல்ல… மதுரை மாநாட்டில் ரசிகர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை பகிர்ந்த தளபதி விஜய்!
கூலி படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் பதிவு :
Deva 🤝 Dahaa 💥😎🔥 #Coolie#Coolie ruling in theatres worldwide🌟@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @Reba_Monica @monishablessyb @anbariv @girishganges @philoedit @ArtSathees… pic.twitter.com/BjaUKrRF03
— Sun Pictures (@sunpictures) August 21, 2025
கூலி படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்த ஆமிர் கான் :
கூலி படத்தில் நடிப்பதற்கு ஆமிர்கான் சுமார் ரூ 20 கோடி சம்பளம் பெற்றதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், அதை மறுத்த அவர், கூலி படத்தில் நடிப்பதற்கு ஒரு பைசா கூட வாங்கவில்லை என்று தெரிவித்திருந்தார். ரஜினிகாந்த் மீது மிகுந்த மரியாதையும், அன்பும் உள்ள காரணத்தால், அவருடன் நடித்ததே போதும் சம்பளம் வேண்டாம் என நடிகர் ஆமிர் கான் கூறியிருந்தார். இந்நிலையில், இவர் கூலி படத்திற்காகச் சம்பளமே வாங்காமல் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.