சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த திருமணம் – நடிகர் கிருஷ்ணா வெளியிட்ட எக்ஸ் போஸ்ட்

Actor Krishna: தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்த கிருஷ்ணா தற்போது தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் ஒரு கோவிலில் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு புதிய தொடக்கம் என்று தெரிவித்து உள்ளார்.

சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த திருமணம் - நடிகர் கிருஷ்ணா வெளியிட்ட எக்ஸ் போஸ்ட்

நடிகர் கிருஷ்ணா

Updated On: 

06 Jun 2025 14:57 PM

 IST

தமிழ் சினிமாவின் நடிகரும் இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பியுமான கிருஷ்ணா (Actor Krishna) தனது எக்ஸ் தள பக்கத்தில் திருமணம் ஆனா புகைப்படம் ஒன்றை பதிவிட்டு புதிய பயணம் தொடங்குகிறது என்று தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. மேலும் தங்களது வாழ்த்துகளையும் நடிகர் கிருஷ்ணாவிற்கு ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். நடிகர் கிருஷ்ணாவிற்கு முன்னதாக திருமணம் நடைப்பெற்று அது விவாகரத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இது இரண்டாவது திருமணம் ஆகும், தமிழில் பெரிய அளவில் படங்களை நடிக்கவில்லை என்றாலும் நடிகர் கிருஷ்ணாவிற்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது. கோலிவுட் சினிமாவில் விரல் விட்டு எண்ணும் அளவிற்குதான் நடிகர் கிருஷ்ணா படங்களில் நடித்து இருந்தாலும் அவரது படங்களை ரசிகர்கள் இன்றும் தொலைக்காட்சியில் பார்த்து ரசித்து வருகிறார்கள். பெரிய நடிகராக இல்லாமல் இருந்தாலும் தனது படங்கள் மூலம் மக்கள் தன்னை மறக்காமல் வைத்திருக்கிறார் நடிகர் கிருஷ்ணா.

நடிகர் கிருஷ்ணா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆன படம்:

1990-ம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடிகர் கிருஷ்ணா அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இருவர், தி டெரரிஸ்ட், உதயா ஆகிய படங்களில் துணைக் கதாப்பாத்திரமாக நடிகர் கிருஷ்ணா நடித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு இயக்குநர் நீலன் கே சேகர் இயக்கத்தில் வெளியான அலிபாபா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவருடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் ஜனனி, பிஜு மேனன், திலகன், மற்றும் அழகம் பெருமாள் ஆகியோரும் நடித்து இருந்தனர்.

நடிகர் கிருஷ்ணா நடிப்பில் வெளியான படங்கள்:

நடிகர் கிருஷ்ணா நாயகனாக நடித்த முதல் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்ற நிலையில் அவர் அடுத்தடுத்து கற்றது களவு, கழுகு, வல்லினம், யாமிருக்க பயமேன், வானவராயன் வல்லவராயன், வன்மம், யட்சன், யாக்கை, பண்டிகை, நிபுனன், விழித்திரு, வீரா, களரி, மாரி 2, கழுகு 2, ராயர் பரம்பரை ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் கிருஷ்ணா:

நடிகர் கிருஷ்ணா தமிழ் சினிமாவில் நாயகனாக வலம் வந்தாலும் மற்ற மொழிகளில் தயாரிப்பாளராகவும் வலம் வந்துள்ளார். அதன்படி தெலுங்கு மொழியில் நடிகர் கிருஷ்ணா சுமார் 3 வெப் தொடர்களையும் தமிழில் சமீபத்தில் ஜியோ ஹார்ஸ்டாரில் வெளியான பாரசூட் என்ற வெப் தொடரையும் தயாரித்துள்ளார். இந்த தொடரில் நடிகர் கிருஷ்ணா நடிக்கவும் செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories
Rajinikanth : கதை.. இயக்குநர்.. கேரக்டர்.. கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிப்பது குறித்து பேசிய ரஜினிகாந்த்!
நெட்ஃபிலிக்ஸில் இருந்து திடீரென நீக்கப்பட்ட அஜித்தின் குட் பேட் அக்லி படம் – என்ன காரணம் தெரியுமா?
சந்தானத்திற்கு நிஜமாவே அந்த சீன்ல தூக்கம் வந்துட்டு இருந்தது –  சிவா மனசுல சக்தி படத்தின் ஷூட்டிங் அனுபவத்தை பகிர்ந்த ஜீவா
நடிகர் ஜெய் நடிக்காமல் தவறவிட்ட 3 சூப்பர் ஹிட் படங்கள் என்னென்ன தெரியுமா? அவரே சொன்ன விசயம்
இந்தியாவிலே சிறந்த சினிமாத்துறை என்றால் அதுதான்- ஆண்ட்ரியா ஜெரேமியா ஓபன் டாக்!
மீண்டும் இணைகிறதா சிவகார்த்திகேயனின் மதராஸி கூட்டணி? – வைரலாகும் தகவல்!