தவெக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறார் விஜய்.. இடம்பெறும் முக்கிய அறிவிப்புகள் என்ன?

தமிழக வெற்றிக் கழகம் தனது முழுமையான தேர்தல் அறிக்கையை இன்று மாலை அதன் தலைவர் விஜய் வெளியிட உள்ளார். தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வரும் நிலையில், கட்சியின் வேட்பாளர்கள் ஒரு பக்கம் பிரச்சாரம் மேற்கொண்டு வர, தலைவர் விஜய் மாவட்டம் தோறும் சென்று ரோட் ஷோ நடத்தி, வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

தவெக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறார் விஜய்.. இடம்பெறும் முக்கிய அறிவிப்புகள் என்ன?

கோப்பு புகைப்படம்

Published: 

16 Apr 2026 09:51 AM

 IST

சென்னை, ஏப்ரல் 16, 2026: 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், தேசிய தலைவர்கள் என அனைவரும் தமிழகத்தில் முகாமிட்டு அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொருவரும் மக்களை கவரும் வகையில் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

தவெக தேர்தல் அறிக்கையை வெளியிடும் விஜய்:

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தனது முழுமையான தேர்தல் அறிக்கையை இன்று மாலை அதன் தலைவர் விஜய் வெளியிட உள்ளார். தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வரும் நிலையில், கட்சியின் வேட்பாளர்கள் ஒரு பக்கம் பிரச்சாரம் மேற்கொண்டு வர, தலைவர் விஜய் மாவட்டம் தோறும் சென்று ரோட் ஷோ நடத்தி, வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் படிக்க: தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி.. 3 முக்கிய தொகுதிகளில் சூறாவளிப் பரப்புரை.. விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி?

காரைக்குடி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டதையடுத்து, நேற்று சென்னை ஆயிரம் விளக்கு, தியாகராய நகர் உள்ளிட்ட தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் விடுதியில் நடைபெறுகிறது.

இதுகுறித்து கட்சி தலைமையகம் வெளியிட்ட அறிவிப்பில், இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில், தொலைநோக்கு பார்வையுடன் தமிழக மக்களுக்கான தேர்தல் அறிக்கையை விஜய் வெளியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

800 பேருக்கு மட்டுமே அனுமதி:

இந்த நிகழ்ச்சியில் 800 நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. QR கோடு கொண்ட அனுமதி சீட்டு பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்; பிறருக்கு அனுமதி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழகமெங்கும் எதிர்ப்புத்தீ பரவட்டும்.. கருப்பு சட்டை அணிந்து, கருப்புக்கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்..

இடம்பெறும் முக்கிய அறிவிப்புகள் என்ன?

ஏற்கனவே, விவசாயிகள், நெசவாளர்கள், காவல்துறை உள்ளிட்ட பல தரப்பினருக்கான வாக்குறுதிகளை கட்டம் கட்டமாக அறிவித்துள்ள நிலையில், தற்போது முழுமையான தேர்தல் அறிக்கையை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

முக்கியமாக, விவசாய கடன் தள்ளுபடி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹2500, குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசம் போன்ற திட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று வெளியிடப்படும் அறிக்கையிலும் மக்களை கவரும் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
கோஸ்ட் டெலிவரி மோசடி: LPG சிலிண்டர் புக்கிங்கில் புதிய சிக்கல்..
கும்பமேளா வைரல் மோனாலிசா போஸ்லே காணவில்லை .. ஃபர்மான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..
ஆண்ட்டி என அழைத்ததால் மன உளைச்சல் - நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு
சாலையில் குட்காவை துப்பிய இந்திய சுற்றுலா பயணிகள் - சுத்தம் செய்ய வைத்த நேபாளி