Tamil Nadu Election 2026 Live: தமிழக வெற்றிக்கழக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறார் விஜய்..
Tamil Nadu Election 2026 Live: தமிழகத்தைப் பொறுத்தவரையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் இடையே நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், தேசிய தலைவர்களும் தமிழகத்திற்கு வருகை தந்து வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு தேர்தல் நேரலை
LIVE NEWS & UPDATES
-
தமிழகம் வரும் ராகுல் காந்தி.. மகிழ்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்..
ராகுல் காந்தி பிரசாரம் செய்யவிருக்கும் மூன்று தொகுதிகளுமே காங்கிரஸ் நேரடியாகப் போட்டியிடும் ‘கௌரவத் தொகுதிகள்’ஆகும். தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. ஏற்கனவே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தொகுதிகளில் தீவிரமாகப் பிரசாரம் செய்து வரும் நிலையில், ராகுல் காந்தியின் இந்த வருகை காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி..
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமான ராகுல் காந்தியின் வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அரசியல் அரங்கில் பல்வேறு விவாதங்களையும் கிளப்பியுள்ளது. வரும் ஏப்ரல் 18ஆம் தேதி (சனிக்கிழமை) ராகுல் காந்தி தமிழகத்தில் தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
-
ஸ்டாலின் முன் விஜய்யை விமர்சித்த பிரேமலதா..
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அவரது அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசிய பிரேமலதா, அரசியலில் அனுபவம் மிக முக்கியம் என்பதைச் சுட்டிக்காட்டினார். “75 வருஷ பாரம்பரியம் கொண்ட கட்சிகள் இருக்கும் இடத்தில், நீங்கள் இப்போதுதான் லாலிபாப் சாப்பிடும் ஒரு ‘ஃபர்ஸ்ட் பேபி’. அரசியலைப் பொறுத்தவரை நீங்கள் ஒரு ஹீரோ அல்ல, ஒரு ‘லிட்டில் பாய்’ (Little Boy) தான்” என விமர்சித்தார்.
-
யாரெல்லாம் தபால் வாக்கை பயன்படுத்தலாம்?
சென்னையில் உள்ள 16 தொகுதிகளில், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தபடியே அஞ்சல் வாக்குப்பதிவு செய்யலாம். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தபால் வாக்குகளை பதிவு செய்யலாம்.
-
சென்னையில் தொடங்கிய தபால் வாக்குப்பதிவு..
தபால் வாக்குப்பதிவு முறை தற்போது தொடங்கியுள்ளது. சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் அஞ்சல் வாக்குப்பதிவு ஏப்ரல் 16, 17, 18 ஆகிய நாட்களில் நடைபெறும் என மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
இன்று வெளியாகும் தவெக தேர்தல் அறிக்கை..
தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழக தேர்தல் அறிக்கையை இன்று மாலை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிடுகிறார்.