Tamil Nadu Election 2026 Live: திருப்பூரில் ரோட் ஷோ செல்லும் விஜய்? தேர்தல் களநிலவரம் என்ன?
Tamil Nadu Election 2026 Live: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அரசியல் கட்சி தலைவர்களும், ஆதரவாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தவெக தலைவர் விஜய், எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர்

மாதிரி புகைப்படம்
LIVE NEWS & UPDATES
-
பாஜகவின் தேர்தல் வாக்குறுதி
தமிழ்நாடு பாஜகவின் தேர்தல் வாக்குறுதி அறிக்கையை வெளியிட்டார் ஜேபி நட்டா.
-
வீட்டுச் சந்திப்புகளுக்கே அதிக முக்கியத்துவம்
பிரதமர் மோடி தனது உரையில், பெரிய பொதுக்கூட்டங்களை விடவும், சிறிய அளவிலான தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் வீட்டுச் சந்திப்புகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
-
PM Modi Tamil Nadu Visit : தமிழகம் வரும் பிரதமர் மோடி
பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 15-ம் தேதி நாகர்கோவிலிலும், ஏப்ரல் 18-ம் தேதி கோவையிலும் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்தப் பயணத்தின் முன்னோட்டமாகவே, நேற்று மாலை 4 மணியளவில் தமிழக பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக விரிவான ஆலோசனை நடத்தினார்.
-
முக்கிய ஆலோசனை
எனது பூத், வலிமையான பூத்” (Mera Booth Sabse Mazboot) என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தேர்தல் வெற்றிக்குத் தேவையான முக்கிய ஆலோசனைகளை அவர் வழங்கினார்
-
பிரதமர் மோடி ஆலோசனை
தமிழகத்தைச் சேர்ந்த பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாகத் கலந்துரையாடினார் பிரதமர் மோடி
-
ஏமாற்றுவேலை – சீமான் ஆவேசம்
திமுகவுக்கு, மாற்று அதிமுக. கிடையாது. அதுபோல, அதிமுகவுக்கு மாற்று திமுக கிடையாது. இரண்டும் ஒரே கட்சி தான். ஒரே ஏமாற்று வேலையைத்தான் பார்க்கிறார்கள் -சீமான்
-
5 இடத்தில் தலைநகர் உருவாக்குவோம் – சீமான்
தலைநகரை மாற்றுவோம், தமிழகத்தை மாற்றுவோம் என்பதே எங்கள் தத்துவம். ஒரு இடத்தில் தலைநகர் இருப்பதை போல், 5 இடத்தில் தலைநகர் உருவாக்குவோம் – சீமான்
-
வாழும் இடத்திலேயே அரசு வேலை – சீமான்
வாழை, தென்னை, மூங்கில், ஆமணக்கு செடி போன்றவற்றை வளர்த்து அதன் மூலம் தொழிற்சாலைகள் உருவாக்கி, வேலைவாய்ப்பை உருவாக்குவோம். நீங்கள் வாழும் இடத்திலேயே, அரசு வேலை கொடுப்பேன்.
-
படிக்காவிட்டாலும் அரசு வேலை
தமிழர் கட்சி ஆட்சியில், படித்தாலும், படிக்காவிட்டாலும் அரசு வேலை வழங்குவேன். பட்டுப்பூச்சி, கழுதை, பன்றி, தேனி, எருமை போன்றவற்றை வளர்ப்பேன்.
-
Seeman Speech : அரசு வேலை – சீமான் விளக்கம்
படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் அரசு வேலை வழங்குவது எப்படி? என்பது பற்றி மதுரை பிரச்சாரத்தில் சீமான் விளக்கினார்.
-
ஜனநாயகன் பிரச்னை – சரத்குமார் விளக்கம்
‘ஜனநாயகன்’ திரைப்படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியாகிறது என்றால் அதனை திரைப்படத்தின் தயாரிப்பாளரிடம் தான் கேட்க வேண்டும். இந்த திரைப்படம் இணையத்தில் வெளியானதற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் காரணம் என்ற குற்றச்சாட்டு அபத்தமானது – சரத்குமார்
-
வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – சரத்குமார்
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழகத்தின் கடன் ரூ.5 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது, ரூ.10.71 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. திமுக ஆட்சியில் கூடுதலாக வாங்கிய ரூ.5 லட்சம் கோடி கடன் எதற்காக செலவிடப்பட்டது என்பதற்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – சரத்குமார்
-
தமிழிசையை ஆதரித்து சரத்குமார் பிரசாரம்
சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
தமிழகம் என்றாலே ஊழல் – சரத்குமார் பேச்சு
தமிழகம் என்றாலே ஊழல் என்பதை மாற்ற வேண்டும். மத்திய அரசு 11 ஆண்டுகளாக தமிழகத்திற்கு ரூ.11 லட்சம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது – பரப்புரையில் சரத்குமார் பேச்சு
-
விஜய் பிரசாரம் ரத்தாவது ஏன்?
காவல்துறை வழங்கப்பட்டுள்ள நேரத்துக்குள் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்பதால் பல இடங்களில் நேரமின்மை காரணமாக விஜய் பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாக கூறப்படுகிறது
-
விஜய்யின் தருமபுரி பிரசாரம் ரத்து
தர்மபுரியில் இன்று விஜய் பிரசாரத்தை திடீரென த.வெ.க. ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது
-
Tvk Vijay Road show : விஜய் ரோடு ஷோ பிளான்
மதியம் 3 மணிக்கு ஆட்டையாம்பாளையம் பிரிவில் இருந்து பிரசார வாகனத்தில் சென்று அவினாசி பழைய பஸ் நிலையம் அருகே ரோடு ஷோ செல்லவுள்ளார்
-
விஜய் பிரச்சாரம் எங்கெங்கு?
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு. திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்க யம், தாராபுரம் உள்ளிட்ட தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து இன்று விஜய் பிரச்சாரம்
-
TVK Vijay : விஜய் பிரச்சாரம் எங்கெங்கு?
அவினாசி, பெருமாநல்லூரில் த.வெ.க. தலைவர் விஜய் இன்று பிரசாரம் செய்யவுள்ளார்
-
இன்று 11.19 சதவீத வளர்ச்சி
பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி வெறும் 0.07 சதவீதம் மட்டுமே. ஆனால் இன்று 11.19 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது என ஸ்டாலின் பேச்சு
-
திராவிட மாடல் 2.0 ஆட்சியை நாம் அமைத்தே ஆக வேண்டும் – மு.க.ஸ்டாலின்
சவாலில் தமிழ்நாடு வெற்றி பெற வேண்டும். அதற்கு திமுக கூட்டணி தான் வெற்றி பெற வேண்டும். திராவிட மாடல் 2.0 ஆட்சியை நாம் அமைத்தே ஆக வேண்டும் – மு.க.ஸ்டாலின்
-
ஆபத்து வடக்கிலிருந்து தான் வரும்
திருவள்ளூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டுக்கு எப்போதும் ஆபத்து வடக்கிலிருந்து தான் வரும் என்றார்.
-
MK Stalin : ஸ்டாலின் உருக்கமான பேச்சு
நான் உயிரோடு இருக்கும் வரை, திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டை யாராலும் தொட்டுப் பார்க்க முடியாது என திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கமான பேச்சு
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23, 2026 தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த தேர்தல் களத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற கூட்டணி, அதிமுக, பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே நாளில் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்தி தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக கட்சிக்கு ஆதரவாக தேசிய தலைவர்கள், சில மாநில முதல்வர்களுமே பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14, 2026 அன்று திருப்பூர் மற்றும் தருமபுரியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவா் விஜய் தோ்தல் பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளாா். அதே போல தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 14, 2026 அன்று வேலூர், திருப்பத்தூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடவிருக்கிறார்.