Tamil Nadu Election 2026 Live: நெருங்கிய தேர்தல்.. சூறாவளி பிரசாரத்தில் தலைவர்கள்!
Tamil Nadu Election 2026 Live: தமிழகத்தைப் பொறுத்தவரையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் இடையே நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Nadu Assembly Election 2026
LIVE NEWS & UPDATES
-
அமித்ஷா பொதுக்கூட்டம்
அமித் ஷா கோயம்புத்தூர், சென்னை (மயிலாப்பூர்), மொடக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பிரம்மாண்ட ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார். சென்னையில் மயிலாப்பூர் பகுதியில் அவர் மேற்கொள்ளும் ரோடு ஷோவிற்காக விரிவான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கோயம்புத்தூரில் முக்கிய வீதிகள் வழியாக அவர் வாகனத்தில் சென்றபடி மக்களிடையே வாக்கு சேகரிக்க உள்ளார்
-
உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்
அமித்ஷா வருகையை முன்னிட்டு கோவை, சென்னை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன
-
அமித்ஷா தமிழ்நாடு வருகை
இன்றைய தினம் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை தந்துள்ளார்.
-
27 நிபந்தனை என்ன?
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறாமல் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். பிரச்சாரம் மேற்கொள்ளும் இடத்தில் சுவரொட்டியோ, கட்சி கொடிகளோ, விளம்பர பதாகையோ அனுமதியின்றி வைக்கக்கூடாது உள்ள்ளிட்ட 27 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர்
-
எந்தெந்து இடங்களில் பிரசாரம்?
திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட விமான நிலையம் அருகே உள்ள வயர்லஸ் சாலையில் தனது பிரச்சாரத்தை தொடங்கும் அவர் தென்றல்நகர், கே.கே.நகர் பஸ்நிலையம், காஜாமலை சாலை, இ.வி.ஆர்.கல்லூரி சாலை, தமிழ்நாடு ஓட்டல், கோழிப்பண்ணை சாலை, கொட்டப்பட்டு பகுதிகளில் திறந்த வாகனத்தில் நின்றபடியே வாக்கு சேகரிக்கிறார்.
-
சுயேட்சைக்கு ஆதரவு தெரிவித்த விஜய்
எடப்பாடி தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு என விஜய் அதிரடி அறிவிப்பு
-
பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை
சென்னையில் இருந்து தனி விமானத்தில் இன்று மதியம் 2 மணியளவில் விஜய் திருச்சிக்கு வருகிறார். பின்னர் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு தனக்கு வாக்கு சேகரிக்க இருக்கிறார்.
-
10 பொதுவான நிபந்தனை
திருச்சியில் விஜய் பிரச்சாரம் செய்வதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் 10 பொதுவான நிபந்தனைகளை வைத்துள்ளார்
-
Vijay Trichy Visit : திருச்சியில் விசிட் அடிக்கும் விஜய்
திருச்சி கிழக்கில் இன்று வீதி வீதியாக வாக்கு சேகரிக்க வருகிறார் விஜய்
-
வசதியை பெறுவது எப்படி?
இந்த வசதிகளைப் பெற வேண்டுமென்றால் Saksham App மூலமாகவும், எண் 1950 அல்லது மாவட்ட தேர்தல் அலுவலக கட்டுபாட்டு அறை எண் 1800-425-7012 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு பயனடையலாம்
-
இலவச வாகன ஏற்பாடு
தேர்தல் நாளன்று சென்னை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல இலவச வாகன ஏற்பாடு
-
தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி போட்டி
இக்குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி போட்டி நடத்தப்பட்டது
-
வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு
இந்த குடியிருப்புகளில் வசிக்கும் வாக்காளர்களுக்கு மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
-
குடியிருப்பு வளாகத்துக்குள்ளேயே வாக்குச்சாவடி
சென்னை மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் உள்ள 5 அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்காளர்களின் வசதிக்காக குடியிருப்பு வளாகத்துக்குள்ளேயே வாக்குச்சாவடி அமைக்கப்படுகிறது.
-
நெருக்கடி தருகிறார்கள் – விஜய்
கடைசி நேரம் வரை காத்திருக்க செய்து, அனுமதி கடிதத்தைத் தாமதமாக அளித்து, நமக்கான பிரசார முன்னேற்பாடுகளை செய்யவிடாமல் நெருக்கடி தருகிறார்கள் – விஜய்
-
விஜய் குற்றச்சாட்டு
தேர்தல் ஆணையத்திடம் என்னதான் பொறுப்பு இருந்தாலும், காபந்து அரசான கபட நாடகத் தி.மு.க. அரசு, தன் கையில் வைத்திருக்கும் அதிகாரிகள் சிலரை வைத்து நமக்கு மட்டுமல்லாமல் நம் வேட்பாளர்களுக்கும் பரப்புரை செய்ய நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் நீட்டிக்கவே செய்கின்றது – விஜய்
-
அடிக்கடி ரத்தாகும் விஜய் பிரசாரம்
விஜய்யின் பிரச்சாரம் அடிக்கடி ரத்து செய்யப்படுவது அக்கட்சியினரிடையே கவலையை அதிகரித்துள்ளது. குறிப்பாக காவல்துறை அனுமதித்தும் விஜய் பிரச்சாரத்தை ரத்து செய்வதாகவும் இது அக்கட்சிக்கு பின்னடைவாக அமைய வாய்ப்பிருப்பதாகவும் அக்கட்சி தொண்டர்களும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கக்கூடிய சூழலில், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் தான் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் ஏப்ரல் 19 அன்று பரப்புரை மேற்கொள்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏப்ரல் 19 அன்று நன்னிலம் மற்றும் வேதாரண்யம் ஆகிய தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார்.