Tamil Nadu Election 2026 Live: நெருங்கும் தேர்தல்.. கமல்ஹாசன் இன்று பிரசாரம்!

Tamil Nadu Election 2026 Live: தமிழகத்தைப் பொறுத்தவரையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் இடையே நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tamil Nadu Election 2026 Live: நெருங்கும் தேர்தல்.. கமல்ஹாசன் இன்று பிரசாரம்!

Tamil Nadu Assembly Election 2026

Updated On: 

17 Apr 2026 08:42 AM

 IST

LIVE NEWS & UPDATES

  • 17 Apr 2026 09:25 AM (IST)

    சென்னை வாக்குசேகரிப்புதான் சிக்கல்

    ஏப்ரல் 15, 2026 அன்று அவர் சென்னையின் முக்கிய பகுதிகளான தியாகராய  நகர், ஆயிரம் விளக்கு மற்றும் எழும்பூர் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

  • 17 Apr 2026 09:15 AM (IST)

    TVK Vijay : விஜய் மீது வழக்குப்பதிவு

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்  மீது, தடைகளை மீறி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

  • 17 Apr 2026 08:56 AM (IST)

    வழக்கத்தைவிட அதிகமான பேருந்துகள்

    அதேபோல் மீண்டு சென்னை திரும்பவும் அந்தந்த ஊர்களில் இருந்து வழக்கத்தைவிட அதிகமான பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

  • 17 Apr 2026 08:47 AM (IST)

    சுமார் 10,633 பேருந்துகள் பிளான்

    ஏப்ரல் 21, 22 மற்றும் 23 ஆகிய மூன்று நாட்களுக்கு சேர்த்து சுமார் 10,633 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் இருந்து தினசரி இயக்கூடிய 2,092 பேருந்துகள் உடன் சுமார் 5,574 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்து கழகம் கூறியுள்ளது.

  • 17 Apr 2026 08:26 AM (IST)

    சிறப்பு பேருந்துகள் திட்டம்

    வெளியூரில் வசிக்கும் நிலையில், அவர்கள் அனைவரும் வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.இதற்காக சிறப்பு பேருந்துகள் திட்டமிடப்பட்டுள்ளன

  • 17 Apr 2026 08:15 AM (IST)

    கட்டாயம் விடுமுறை வழங்க வேண்டும்

    தேர்தல் அன்று அனைத்து அரசு துறை ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமன்றி தனியார் நிறுவனங்களும் அன்றைய தினம் கட்டாயம் விடுமுறை வழங்க வேண்டும் என கூறியுள்ளது.

  • 17 Apr 2026 07:56 AM (IST)

    Election Special bus: 10,633 சிறப்பு பேருந்துகள்

    சட்டமன்ற தேர்தலுக்கு 10,633 சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு திட்டமிடப்பட்டுள்ளது

  • 17 Apr 2026 07:48 AM (IST)

    இந்த முறை வண்ணப்புகைப்படம்

    வேட்பாளர்களின் பெயர், வண்ணப் புகைப்படம் மற்றும் சின்னம் உள்ளடங்கிய வாக்குச்சீட்டுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி நேற்று முதல் தொடங்கி நடைபெறுகிறது.

  • 17 Apr 2026 07:30 AM (IST)

    தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார்

    சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் பொருத்தும் பணியை நேற்று தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார்

  • 17 Apr 2026 07:17 AM (IST)

    இன்று 5 தொகுதிகளில் பிரசாரம்

    ஏப்ரல் 17ம் தேதியான இன்று 5 தொகுதிகளிலும், 19ம் தேதி 2 தொகுதிகளையும் உள்ளடக்கி கமல்ஹாசன் பிரசாரம் செய்யவுள்ளார்

  • 17 Apr 2026 07:16 AM (IST)

    கமல்ஹாசன் இன்று பிரசாரம்

    மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று மற்றும் 19 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்யவுள்ளார்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கக்கூடிய சூழலில், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் அத்தியாவசியப் பணி அலுவலர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்துவதற்கான தபால் வாக்குப்பதிவு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஏப்ரல் 17 முதல் 19 வரை நடைபெறுகிறது.  மேலும் ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.

 

Follow Us
கோஸ்ட் டெலிவரி மோசடி: LPG சிலிண்டர் புக்கிங்கில் புதிய சிக்கல்..
கும்பமேளா வைரல் மோனாலிசா போஸ்லே காணவில்லை .. ஃபர்மான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..
ஆண்ட்டி என அழைத்ததால் மன உளைச்சல் - நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு
சாலையில் குட்காவை துப்பிய இந்திய சுற்றுலா பயணிகள் - சுத்தம் செய்ய வைத்த நேபாளி