Seeman Tamil Nadu Election: தனித்து களம் காணும் நாதக… காங்கிரஸ் கோட்டையில் களமிறங்கும் சீமான்.. வெற்றியை வசமாக்குவாரா! | TV9 Tamil News

Seeman Tamil Nadu Election: தனித்து களம் காணும் நாதக… காங்கிரஸ் கோட்டையில் களமிறங்கும் சீமான்.. வெற்றியை வசமாக்குவாரா!

Updated On: 

10 Mar 2026 11:55 AM

 IST

Tamil Nadu Elections 2026: தமிழக தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு வரும் நிலையில், வருகிற தேர்தலிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு தனது வெற்றியை வசமாக்கி கொள்வாரா.

1 / 5நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து வருபவர் சீமான். இவர், கடந்த 1966- ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி செந்தமிழன்- அன்னம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். தமிழ் திரைப்பட இயக்குனராகவும், நடிகராகவும் இருந்து வந்த சீமான் திராவிடக் கொள்கையையும் பின்பற்றி வந்தார். இதன் காரணமாக திராவிட இயக்கங்கள் சார்பில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்று மேடைகளில் பேசி வந்தார். அப்போது திராவிட கழகத்துடன் சேர்ந்து பெரியாரின் கொள்கைகளை பரப்பி வந்தார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து வருபவர் சீமான். இவர், கடந்த 1966- ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி செந்தமிழன்- அன்னம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். தமிழ் திரைப்பட இயக்குனராகவும், நடிகராகவும் இருந்து வந்த சீமான் திராவிடக் கொள்கையையும் பின்பற்றி வந்தார். இதன் காரணமாக திராவிட இயக்கங்கள் சார்பில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்று மேடைகளில் பேசி வந்தார். அப்போது திராவிட கழகத்துடன் சேர்ந்து பெரியாரின் கொள்கைகளை பரப்பி வந்தார்.

2 / 5

பின்னர் நாம் தமிழர் இயக்கத்தை தொடங்கிய சீமான் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததுடன் 2010- ஆம் ஆண்டு அந்த இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, 2016 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. இதில், கடலூர் தொகுதியில் இருந்து முதலமைச்சர் வேட்பாளராக சீமான் போட்டியிட்டார். இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி படுதோல்வியை சந்தித்து இருந்தாலும் 1.11 சதவீத வாக்குகளை பெற்றது. சீமான் 12,497 வாக்குகள் பெற்று 5- ஆவது இடத்தை பெற்றார்.

3 / 5

பின்னர், 2019- ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு 20 ஆண்கள் மற்றும் 20 பெண் வேட்பாளர்களை அறிவித்திருந்தார். இந்த தேர்தலில் நாதக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்ததுடன், டெபாசிட்டையும் இழந்தது. ஆனால், 4 சதவீத வாக்கு வங்கியை பெற்றது. பின்னர் கடந்த 2021- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிட்டதுடன், சீமான் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டார்.

4 / 5

ஆனால், இந்த தேர்தலிலும் சீமான் தோல்வி அடைந்ததுடன் 48,597 வாக்குகள் பெற்று 3-ஆம் இடத்தை பிடித்திருந்தார். இதில், நாம் தமிழர் கட்சியானது 6.72 சதவீத வாக்கு வங்கியை பெற்றிருந்தது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சீமான் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். காரைக்குடி தொகுதியானது காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. இந்த தொகுதியில் தேசிய கட்சியின் வேட்பாளரை எதிர்த்து சீமான் களம் இறங்குவது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

5 / 5

அதே நேரத்தில், தனக்கான வாக்கு வங்கி இந்த தொகுதியில் அதிகரிக்கும் என்ற வியூகத்தின் அடிப்படையில் சீமான் களமிறங்குவதாகவும் தெரிகிறது. ஒரு வேளை தனது வாக்கு வங்கியை அதிகமாக பெறுவதுடன் வெற்றியை நிரூபித்தால், தேசிய கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்த்து வெற்றி பெற்றோம் என்ற மிகப்பெரிய பெயரை சீமான் சொந்தம் ஆக்கிக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் எதிர்க் கட்சிகள் சார்பில் களமிறக்கப்படும் வேட்பாளர்களை பொருத்து களம் மாற வாய்ப்புகள் உள்ளன.

Follow Us
Related Stories
தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?.. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் கடும் குழப்பம்!!
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி சட்டப்பேரவை.. புதிய அரசு பொறுப்பேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்.. மாநிலத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் மே 4!
சீரடி சாய் பாபா கோவிலில் தவெக தலைவர் விஜய் தரிசனம்..
Puducherry Election Exit Poll Result: புதுச்சேரியில் மீண்டும் மலர்கிறது தேஜ கூட்டணி ஆட்சி.. முதல்வராகும் என்.ரங்கசாமி.. கருத்துக்கணிப்பில் தகவல்!
TVK Exit Poll Result: ஆட்சி அதிகார கனவில் தவெக.. 40 தொகுதிகளே கை கொடுக்க வாய்ப்பு.. விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த கருத்துக் கணிப்பு!