தவெக 3- ஆம் ஆண்டு தொடக்க விழா…சென்னையில் 2- ஆம் தேதி நடைபெறுகிறது…பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்!
Tamilaga Vettri Kazhagam 3rd Anniversary: தமிழக வெற்றிக் கழகத்தின் 3- ஆம் ஆண்டு தொடக்க விழா அடுத்த மாதம் கட்சியின் தலைமை நிலைய செயலகத்தில் நடைபெற உள்ளதாகவும், இந்த விழாவில் விஜய் பங்கேற்க உள்ளதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தவெக 3- ஆம் ஆண்டு தொடக்க விழா
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை மையமாக வைத்து நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் சார்பில் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்து 3- ஆம் ஆண்டு இன்று தொடங்கியது. இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசியல் களத்தில் தமிழக மக்களுக்கான முதல் சக்தியாக தமிழக வெற்றிக் கழகம் செயல் பட்டு வருகிறது. தமிழக வெற்றி கழகத்தை நமது தலைவர் விஜய் ஆரம்பித்து வெற்றிகரமாக 2 ஆண்டுகள் நிறைவடைந்து, 3- ஆம் ஆண்டு தொடங்க உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்களுக்கு நமது தலைவர் விஜயின் முன்னெடுப்புகள் மிக முக்கிய பங்கு வகித்திருந்தது.
தவெக கடந்த வந்த பாதை எளிதானதல்ல
ஆனாலும், தமிழக வெற்றி கழகமும், இந்த கட்சியை சேர்ந்தவர்களும் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானதல்ல என்பது அனைவருக்கும் தெரியும். தன் மீது பெரிதளவில் அன்பு வைத்துள்ள தமிழக மக்களுக்காக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அத்தனை தடைகளையும் தாண்டி இன்னும் வேகமாக களமாடி வருகிறார். தமிழக மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகள் என அனைத்தையும் பூர்த்தி செய்யும் இலக்கை அடைவதற்கான வெற்றி பயணத்தில் இன்னும் அதிக ஈடுபாட்டுடன் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் ஈடுபட்டுள்ளார்.
மேலும் படிக்க: நிர்வாகிகளுடன் ஆலோசனை.. யாருடன் கூட்டணி? இன்று அறிவிக்கும் ஓபிஎஸ்
தவெக 3- ஆம் ஆண்டு தொடக்க விழா
தமிழக வெற்றி கழகம் 3- ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நாளை நாம் சிறப்பாக கொண்டாடி மகிழ்வோம். தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் தலைமையில் கட்சியின் 3- ஆம் ஆண்டு தொடக்க விழா அடுத்த மாதம் பிப்ரவரி 2- ஆம் தேதி ( திங்கள் கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்து, தமிழக மக்களுக்காக இணைந்து நிற்க வேண்டும். வருகிற சட்டப் பேரவை தேர்தலில் மக்கள் விரோத திராவிட முன்னேற்ற கழக ஆட்சியை தூக்கி எறிவோம்.
புஸ்ஸி ஆனந்த வெளியிட்ட அறிக்கை
— TVK Party HQ (@TVKPartyHQ) January 29, 2026
விழாவில் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல்
தமிழக வெற்றி கழகம் மாபெரும் வெற்றி பெற்று, நம் வெற்றியின் தலைவர் தலைமையில் மனசாட்சி உள்ள மக்கள் ஆட்சியை அமைக்க உறுதிமொழி ஏற்போம் என்று பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் தலைமை நிலைய செயலகத்தில் நடைபெறும் இந்த விழாவில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: தமிழகத்தில் இடைக்கால பட்ஜெட்?..எப்போது தாக்கல் செய்யலாம்…அரசு தீவிர ஆலோசனை!