Puducherry Elections 2026 LIVE: புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு
Puducherry Assembly Elections 2026 Live Updates in Tamil : ஏப்ரல் 9ம் தேதியான இன்று புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து பிரச்சாரம் செவ்வாய்க்கிழமை மாலை நிறைவடைந்தது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகள் உட்பட 30 சட்டமன்றத் தொகுதிகளை புதுச்சேரி யூனியன் பிரதேசம் கொண்டுள்ளது. அடுத்த ஆட்சி யார் என்பதை இந்த தேர்தல் முடிவு செய்யும்

புதுச்சேரி தேர்தல் நேரலை
LIVE NEWS & UPDATES
-
18% வாக்குப்பதிவு
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 18% வாக்குப்பதிவு
-
Puducherry Polling: பரிசு டோக்கன் விநியோகத்ததாக புகார்.
புதுச்சேரியில் பாகூர் பகுதியில் வாக்காளர்களுக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் பரிசு டோக்கன் விநியோகத்ததாக புகார். இது குறித்து விசாரணை
-
ஜனநாயக உரிமையைப் பயன்படுத்த வேண்டும்
மக்கள் பெருமளவில் வெளியே வந்து தங்களது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்த வேண்டும் – நாராயணசாமி
-
வி. நாராயணசாமி வாக்குப்பதிவு
புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான வி. நாராயணசாமி தனது வாக்கைச் செலுத்திய பிறகு, “புதுச்சேரி மக்கள் இந்தியக் கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என விரும்புகிறார்கள். இங்கு இந்தியக் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றார்
-
ரோபோக்கள் ஏற்படுத்தும் விழிப்புணர்வு
வாக்காளர்களை வரவேற்கும் ரோபோக்கள், அவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை விளக்கமாக எடுத்துக்கூறுகின்றன.
-
ரோபோ வாக்காளர்களை வரவேற்கிறது
புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வி.ஓ.சி. அரசுப் பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், நீலா என்ற ரோபோ வாக்காளர்களை வரவேற்று வருகிறது.
வீடியோ
#WATCH | Puducherry Elections 2026 | A robot, Nila welcomes voters arriving at VOC Govt School to exercise their franchise. https://t.co/0nisPCPdhr pic.twitter.com/HMZoKuQJnf
— ANI (@ANI) April 9, 2026
-
செல்போன்களை வெளியில் ஒப்படைக்க ஏற்பாடு
வாக்களிக்க உள்ளே செல்பவர்கள் செல்போன்களை வெளியில் ஒப்படைத்துவிட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்களித்தப்பின் செல்போன்களை பெற்று செல்லலாம்.
-
Puducherry Voting: காலை 7 மணிக்கே மக்கள் கூட்டம்
காலை 7 மணிக்கே மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். வெயிலுக்கு முன்பாக வாக்களிக்க வாக்காளர்கள் ஆர்வம்
-
மே 4- ஆம் தேதி முடிவுகள்
தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4- ஆம் தேதி ( திங்கள்கிழமை) ஒரே கட்டமாக எண்ணப்பட்டு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.
-
பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்
கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளப் பதிவு ஒன்றின் மூலம் மக்களுக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மூன்று மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசத்திற்கும் தனித்தனியாக பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
-
Puducherry Polling: புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடக்கம்
புதுச்சேரியில் அடுத்த ஆட்சியை நிர்ணயிக்க வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதல் பொதுமக்கள் வாக்களிக்க ஆர்வம்
-
Puducherry Polling: மொத்த வாக்காளர்கள் விவரம்
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 5.03 லட்சம் பெண் வாக்காளர்களும், 4.40 லட்சம் ஆண் வாக்காளர்களும் என மொத்தம் 9 லட்சத்து 50 ஆயிரத்து 311 வாக்காளர்கள் உள்ளனர்
-
Puducherry Voting: 1,099 வாக்குச்சாவடி மையங்கள்
தேர்தலுக்காக புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் சுமார் 1,099 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு
-
294 வேட்பாளர்கள் போட்டி
தேசிய கட்சி வேட்பாளர்கள் 34 பேர், மாநில கட்சி வேட்பாளர்கள் 63 பேர், பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத கட்சிகளின் வேட்பாளர்கள் 80 பேர், 117 சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 294 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
-
Puducherry Polling: 4 முனை போட்டி நிலவி வருகிறது.
தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேஜ கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவி வருகிறது.
-
Puducherry Polling: ஜூன் மாதத்துடன் பதவிக்காலம் முடிகிறது
புதுச்சேரியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு வருகிற ஜூன் மாதத்துடன் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. எனவே, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக இன்று தேர்தல் நடைபெற உள்ளது
-
30 சட்டமன்ற தொகுதிகள் விவரம்
புதுச்சேரி மாநிலமானது யூனியன் பிரதேசமாக செயல்பட்டு வருகிறது. இங்கு, புதுச்சேரி பிராந்தியத்தில் 23 சட்டமன்ற தொகுதிகளும், காரைக்கால் பிராந்தியத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளும், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் தலா 1 சட்டமன்ற தொகுதிகளும் என 30 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
-
Puducherry Voting: காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடக்கம்
புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்
-
Puducherry Polling: புதுச்சேரியில் இன்று தேர்தல்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இங்கு வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
Puducherry Assembly Elections : அஸ்ஸாம் மற்றும் கேரளாவுடன், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இங்கு வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் மொத்தம் 294 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தல், பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியக் கூட்டணிக்கும் இடையிலான ஒரு கௌரவப் போராகும். இன்று நடைபெறவிருந்த புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் செவ்வாய்க்கிழமை மாலை நிறைவடைந்தது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகள் உட்பட 30 சட்டமன்றத் தொகுதிகளை புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்ளடக்கியுள்ளது. யூனியன் பிரதேசத்தில் வாக்காளர் வருகையை அதிகரிப்பதற்காக, தேர்தல் அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட தொடர் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். நேற்று வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும். ஆளும் NDA கூட்டணி சார்பில், அகில இந்திய தேசிய காங்கிரஸ் (AINRC) 16 தொகுதிகளிலும், அதன் முக்கிய கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதா கட்சி (BJP) 10 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. மற்ற கூட்டணிக் கட்சிகளான அதிமுக மற்றும் இந்திய ஜனநாயக கட்சி (IJK) ஆகியவையும் தலா இரண்டு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.