Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிரியும் பாமக? வெடிக்கும் மோதல்.. கூட்டத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் அன்புமணி ராமதாஸ்..

Ramadoss - Anbumani Ramadoss: விழுப்புரம் மாவட்டம் தைலாப்புரத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இரண்டாவது நாளாக கலந்துக்கொள்ளவில்லை. இருப்பினும் அவர் இல்லாமல், சட்டமன்ற தேர்தலை சந்திப்பது எப்படி, எப்படி வெற்றிப்பெறுவது குறித்து கட்சி நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியும் பாமக? வெடிக்கும் மோதல்.. கூட்டத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் அன்புமணி ராமதாஸ்..
அன்புமணி - ராமதாஸ்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 17 May 2025 21:28 PM

பாட்டாளி மக்கள் கட்சியில் இருக்கும் உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸின் அழைப்பை நேற்று அதாவது மே 16 2025 அன்று தைலாபுரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். இன்றும் (மே 17,2025) இரண்டாவது நாளாக மாவட்ட நிர்வாகிகள் இந்த அழைப்பை புறக்கணித்துள்ளனர். இதனால் ஒன்றாக இருந்த பாமக தற்போது இரண்டு பிரிவினர்களாக பிரிந்து செயல்படத் தொடங்கியுள்ளது. ஒரு பக்கம் ராமதாஸ் மற்றொரு பக்கம் அன்புமணி ராமதாஸ். நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாமக பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இதன் காரணமாக ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையே மோதல் வெடிக்க தொடங்கியது. இதனை தொடர்ந்து பாமகவின் இளைஞர் அணி தலைவராக முகுந்தன் நியமிக்கப்பட்டதில் இந்த மோதல் இன்னும் பெரியதாக விட்டது.

வெடித்த மோதல்:

முகுந்தன் இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்ட அதே மேடையில் ராமதாஸுக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் உடன்பாடு இல்லை என ராமதாஸ் பொதுவெளியில் பேசி இருந்தார். அதேபோல் தன்னை சந்திக்க வேண்டும் என்றால் பனையூரில் இருக்கக்கூடிய அலுவலகத்தில் சந்திக்குமாறு தனது தொலைபேசியை பகிர்ந்து கொண்டார். அப்போது தொடங்கிய மோதல் படிப்படியாக வளர்ந்து வருகிறது. சமீபத்தில் அன்புமணி ராமதாசை தலைவர் பதவியில் இருந்து நீக்கிய ராமதாஸ் அவருக்கு செயல் தலைவர் பதவியை அளித்தார். வழக்கமாக கட்சியில் எந்த ஒரு பெரிய முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் அதனைப் பொதுக்குழு உறுப்பினர்கள் கூடி எடுப்பார்கள். ஆனால் அன்புமணி ராமதாஸை நீக்கியது ஒரு செய்தியாளர் சந்திப்பில் கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்தது பெரும் விவாதமாக மாறியது.

கூட்டணியை நான்தான் முடிவு செய்வேன் – ராமதாஸ்:

இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் மே 11 2025 அன்று சென்னை மாமல்லபுரத்தில் அருகே சித்திரை முழு நிலவு மாநாடு வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்றது. அங்கு ஒரே மேடையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டனர். ஆனாலும் அங்கு ஒரு சில பிரச்சனைகள் வெளிப்படையாக எழுந்தது. அதாவது அந்த மாநாட்டில் இளைஞர் அணி தலைவரான முகுந்தனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என புகார் எழுந்தது. இது ஒரு பக்கம் இருக்க 2024 மக்களவை தேர்தலை தொடர்ந்து தற்போது வரை அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல்கள் நிலவை வருகிறது. இந்த சூழலில் மாநாட்டில் பேசிய நிறுவனர் ராமதாஸ் தேர்தல் கூட்டணியை நான்தான் முடிவு செய்வேன் என வெளிப்படையாக பேசியிருந்தார். ராமதாஸை பொருத்தவரையில் கூட்டணி என்றால் அது அதிமுக அல்லது திமுகவுடன் தான் என அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. அதே மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ் என் பின்னால் வாருங்கள் நம் ஆளும் காலம் வந்துவிட்டது என குறிப்பிட்டிருந்தார். கட்சியின் அனைத்து செயல்பாடுகளும் நான் தான் முடிவு செய்வேன் என ராமதாஸ் கூறியிருந்த நிலையில் அன்புமணி ராமதாஸின் இந்த மேடைப்பேச்சு கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரியும் பாமக:

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் இந்தக் கூட்டத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்துக்கும் குறைவான நிர்வாகிகள் மட்டுமே இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இல்லாமலேயே 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உட்கட்சி விவகாரமாக இருந்த இந்த பிரச்சனை வெட்ட வெளிச்சத்திற்கு வந்து பல நாட்கள் ஆகிறது. இதனால் பிற கட்சி தலைவர்களும் பாமகவில் நிலவும் மோதல்கள் குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக தரப்பில் ராமதாஸ் அணி, அன்புமணி ராமதாஸ் அணி என இரண்டு அணிகள் உருவாகும் என்றும் அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலை நீடித்தால் அன்புமணி ராமதாஸ் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து புதிதாக ஒரு அணியை உருவாக்கி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது. ம்

உங்கள் தோலில் இந்த பிரச்னை இருக்கா? சர்க்கரை நோயாக இருக்கலாம்
உங்கள் தோலில் இந்த பிரச்னை இருக்கா? சர்க்கரை நோயாக இருக்கலாம்...
மும்பை ஸ்டேடியத்தில் ரோஹித் பெயர்.. குடும்பமே கண்கலங்கிய தருணம்!
மும்பை ஸ்டேடியத்தில் ரோஹித் பெயர்.. குடும்பமே கண்கலங்கிய தருணம்!...
உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணம் என்ன? தவிர்ப்பது எப்படி?
உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணம் என்ன? தவிர்ப்பது எப்படி?...
நயன்தாராவிற்கு அது கூட செய்யத் தெரியாது - சரண்யா பொன்வண்ணன்!
நயன்தாராவிற்கு அது கூட செய்யத் தெரியாது - சரண்யா பொன்வண்ணன்!...
முதல் போட்டியில் தடைப்போட்ட மழை.. KKR அணிக்கு பிளே ஆஃப் சிக்கல்!
முதல் போட்டியில் தடைப்போட்ட மழை.. KKR அணிக்கு பிளே ஆஃப் சிக்கல்!...
விஜய் ஆண்டனியின் 26வது படத்தின் ஃப்ர்ட்ஸ் லுக் அப்டேட்
விஜய் ஆண்டனியின் 26வது படத்தின் ஃப்ர்ட்ஸ் லுக் அப்டேட்...
கோடையில் சிறுநீரக கற்கள் ஏன் அதிகமாக ஏற்படுகின்றன தெரியுமா?
கோடையில் சிறுநீரக கற்கள் ஏன் அதிகமாக ஏற்படுகின்றன தெரியுமா?...
நிரந்தர தடை - இந்தியர்களுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
நிரந்தர தடை - இந்தியர்களுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை...
அதிகப்படியான தண்ணீர் குடிப்பதும் ஆபத்தா? இவ்வளவு ரிஸ்க் இருக்கு!
அதிகப்படியான தண்ணீர் குடிப்பதும் ஆபத்தா? இவ்வளவு ரிஸ்க் இருக்கு!...
எது திராவிட மாடல், எது காவி மாடல் என தெளிவுபடுத்திய மு.க ஸ்டாலின்
எது திராவிட மாடல், எது காவி மாடல் என தெளிவுபடுத்திய மு.க ஸ்டாலின்...
வெடிக்கும் மோதல்.. கூட்டத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் அன்புமணி..
வெடிக்கும் மோதல்.. கூட்டத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் அன்புமணி.....