K. Annamalai Tamil Nadu Election: ஐபிஎஸ் டூ அரசியல்.. இடையில் சிறிய அதிருப்தி.. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறாரா கே.அண்ணாமலை! | TV9 Tamil News

K. Annamalai Tamil Nadu Election: ஐபிஎஸ் டூ அரசியல்.. இடையில் சிறிய அதிருப்தி.. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறாரா கே.அண்ணாமலை!

Published: 

26 Mar 2026 14:01 PM

 IST

Tamil Nadu Elections 2026: ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து அண்ணாமலை பாஜகவில் இணைந்து மாநில தலைவரா இருந்து வந்தார். அவர் பதவி பறிக்கப்பட்ட நிலையில், புதிய பதவி வழங்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், வரும் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

1 / 5தமிழக பாஜகவின்  மாநில தலைவராக இருந்து வந்தவர்  கே. அண்ணாமலை. இவர், 1984- ஆம் ஆண்டு ஜூன் 4- ஆம் தேதி குப்புசாமி-பரமேஸ்வர் தம்பதிக்கு மகனாக பிறந்தார். ஐபிஎஸ் அதிகாரியான இவர், அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு கடந்த 2020- இல் பாஜகவில் இணைந்தார். 2021- ஆம் ஆண்டு  பாஜக தலைமை பதவி அவரை தேடி வந்தது.  முதல்வர் மு. க. ஸ்டாலின்  தலைமையிலான திமுக அரசை  பல்வேறு விதமாக  விமர்சனம் செய்ததது,  அதிரடி பிரஸ்மீட்,  அதிரடி நடவடிக்கை ஆகியவற்றால்  அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத  நபராக தடம் பதித்தார் அண்ணாமலை. ஆனால்,  திடீரென பாஜக  தலைவர் பதவியில் இருந்து  நீக்கப்பட்ட அண்ணாமலைக்கு தேசிய  அரசியலில் பொறுப்பு வழங்கப்படும் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால்,  தற்போது வரை அவருக்கு எந்தவிதமான பொறுப்புகளும் வழங்கப்படவில்லை.

தமிழக பாஜகவின் மாநில தலைவராக இருந்து வந்தவர் கே. அண்ணாமலை. இவர், 1984- ஆம் ஆண்டு ஜூன் 4- ஆம் தேதி குப்புசாமி-பரமேஸ்வர் தம்பதிக்கு மகனாக பிறந்தார். ஐபிஎஸ் அதிகாரியான இவர், அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு கடந்த 2020- இல் பாஜகவில் இணைந்தார். 2021- ஆம் ஆண்டு பாஜக தலைமை பதவி அவரை தேடி வந்தது. முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை பல்வேறு விதமாக விமர்சனம் செய்ததது, அதிரடி பிரஸ்மீட், அதிரடி நடவடிக்கை ஆகியவற்றால் அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத நபராக தடம் பதித்தார் அண்ணாமலை. ஆனால், திடீரென பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அண்ணாமலைக்கு தேசிய அரசியலில் பொறுப்பு வழங்கப்படும் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால், தற்போது வரை அவருக்கு எந்தவிதமான பொறுப்புகளும் வழங்கப்படவில்லை.

2 / 5

இதில், ஏற்பட்ட அதிருப்தி காரணமாக 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சார களத்தில் தனக்கு வழங்கப்பட்ட தொகுதிக்கான பொறுப்பில் இருந்து திடீரென விலகினார். மாநில தலைவர் என்ற உயரிய பொறுப்பில் இருந்துவிட்டு சில தொகுதிகளுக்கு மட்டும் பொறுப்பாளராக இருப்பதா என்ற அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்குகிறாரா என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது. இதனிடையே, அண்ணாமலை கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட விரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால், பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் அந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

3 / 5

கோவை மாவட்டத்தில் ஒதுக்கப்பட்ட ஒரே தொகுதி கோவை வடக்கு தொகுதி ஆகும். அதிலும், தற்போதைய எம்எல்ஏவாக இருந்து வரும் வானதி சீனிவாசன் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார். சென்னையில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட ஒரே தொகுதியான மயிலாப்பூரிலும் தமிழிசை சௌந்தரராஜன் களமிறக்கப்பட உள்ளார். அதற்கு அச்சாரமாக மயிலாப்பூரில் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட பரப்புரையில் பங்கேற்று இருந்தார். இதனிடையே, பல்லடம் தொகுதியை அண்ணாமலைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிட்ட கோவை தொகுதிக்கு உள்பட்ட பல்லடத்தில் குறைந்த வாக்குகளை பெற்றிருந்த காரணத்தால் அந்த முடிவும் கைவிடப்பட்டதாக தெரிகிறது.

4 / 5

இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று பாஜக தலைமைக்கு அண்ணாமலை கடிதம் எழுதி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தில் தொண்டனாக இருந்து கட்சி மற்றும் தேர்தல் வேலைகளை செய்ய தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளாராம். மேலும், பாஜக தலைமை உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிடுவதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதனிடையே, பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. அதில், 27 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த பட்டியலில் அண்ணாமலை பெயர் குறிப்பிடப்படவில்லை.

5 / 5

இதனால், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார் என்றே தெரிகிறது. அதே வேளையில், பாஜக தலைமை அண்ணாமலையை போட்டியிட வலியுறுத்துவதாகவும், அதிகாரப்பூர்வ பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் பட்சத்தில் அதில் அண்ணாமலை பெயர் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. இதில், திருப்பூர் தொகுதியில் போட்டியிட பாஜக தலைமை வாய்ப்பு வழங்கும் என்றும் கூறப்படுகிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை திமுக வேட்பாளர் இளங்கோவிடம் தோல்வியை தழுவி இருந்தார். இதேபோல, 2024 மக்களவைத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் களமிறங்கிய அண்ணாமலை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் தோல்வியை தழுவி இருந்ததது குறிப்பிடத்தக்கது.

Follow Us