பூந்தமல்லி தவெக வேட்பாளருக்கு சிக்கல் – பெண் அளித்த பரபரப்பு புகார்

Complaint Against TVK Candidate : சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூந்தமல்லி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரகாசம் என்பவர் மீது அக்கட்சியின் பெண் நிர்வாகி பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பூந்தமல்லி தவெக வேட்பாளருக்கு சிக்கல் - பெண் அளித்த பரபரப்பு புகார்

விஜய்யுடன் பிரகாசம்

Updated On: 

31 Mar 2026 12:39 PM

 IST

சென்னை, மார்ச் 31: தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் புதிதாக களம் காணும் நிலையில் அக்கட்சியின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன் படி தனித்து போட்டியிடும் தவெக 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய் மார்ச் 30, 2026 அன்று பெரம்பூர், கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பிரச்சாரத்தை தொடங்கினார்.

பூந்தமல்லி தவெக வேட்பாளர் மீது பெண் நிர்வாகி பரபரப்பு புகார்

மேலும் வில்லிவாக்கம் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ளவிருந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிவித்திருந்தார். இது அவரது கட்சியினரிடையே ஏமாற்றத்தை அளித்தது. மேலும் விஜய்யின் அடுத்தகட்ட பிரச்சார விவரங்கள் குறித்து எந்தவித தகவலும் இல்லாததும் அவருக்கு ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது.

இதையும் படிக்க : திருப்பத்தூரில் தோல்வியே கண்டிராத கே.ஆர்.பெரியகருப்பன்.. அமைச்சரவையில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்வாரா!

இதற்கிடையில் தவெக பூந்தமல்லி தொகுயின் வேட்பாளராக பிரகாசம் என்பவர் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் பிரகாசம் என்பவர் மீது அக்கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த சம்பவம் அக்கட்சியினரிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் தனது கணவருடன் வந்த பெண், பிரகாசம் மீது புகார் அளித்திருந்தார்.

இதையும் படிக்க : தவெக தலைவர் விஜய் பிரம்மாண்ட ரோடு ஷோ… அனுமதி கோரி காவல்துறையிடம் மனு!

அந்த புகாரில் கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருவள்ளூரில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் தவெக பொதுச்செயலாளர் பங்கேற்றிருந்தார். அப்போது கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் குட்டி என்கிற பிரகாசம் தவெக மகளிரணி தலைவர் தவறாக நடந்துகொண்டாதக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக புகாரளித்தபோது கட்சி தலைமை அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் பிரகாசம் பூந்தமல்லி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து அவர் மீது 5 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் கட்சியின் சார்பில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது பூந்தமல்லி வேட்பாளர் மாற்றப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது உருவாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து இதுவரை கட்சியின் தரப்பில் இருந்து எந்த வித அறிக்கையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..