C. Vijayabaskar Tamil Nadu Election: விராலிமலை தொகுதியில் மீண்டும் எம்எல்ஏவாக வலம் வருவாரா சி.விஜயபாஸ்கர்! | TV9 Tamil News

C. Vijayabaskar Tamil Nadu Election: விராலிமலை தொகுதியில் மீண்டும் எம்எல்ஏவாக வலம் வருவாரா சி.விஜயபாஸ்கர்!

Published: 

28 Mar 2026 11:51 AM

 IST

Tamil Nadu Elections 2026: அதிமுகவில் இணைந்தது முதல் புதுக்கோட்டை மற்றும் விராலி மலை சட்டமன்ற தொகுதிகளில் தொடர் வேற்றியை பதிவு செய்து வரும் சி. விஜயபாஸ்கர் வருகின்ற சட்டமன்ற தொகுதியில் மீண்டும் வெற்றியை பதிவு செய்வாரா. கள நிலவரம் எப்படி உள்ளது.

1 / 5அதிமுகவில் முன்னாள் அமைச்சராகவும், தற்போது விராலிமலை எம்எல்ஏவுமாக இருந்து வந்தவர் சி. விஜயபாஸ்கர். இவர், கடந்த 1974- ஆம் ஆண்டு ஏப்ரல் 8- ஆம் தேதி சின்னத்தம்பி என்பவருக்கு மகனாக பிறந்தார். தனது இளமை காலத்தில் அரசியல் ஈடுபாடு காரணமாக அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.  பின்னர், கட்சியில் மெல்ல மெல்ல வளர்ந்து 2001- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அதிமுகவில் முன்னாள் அமைச்சராகவும், தற்போது விராலிமலை எம்எல்ஏவுமாக இருந்து வந்தவர் சி. விஜயபாஸ்கர். இவர், கடந்த 1974- ஆம் ஆண்டு ஏப்ரல் 8- ஆம் தேதி சின்னத்தம்பி என்பவருக்கு மகனாக பிறந்தார். தனது இளமை காலத்தில் அரசியல் ஈடுபாடு காரணமாக அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.  பின்னர், கட்சியில் மெல்ல மெல்ல வளர்ந்து 2001- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

2 / 5

அந்த தேர்தலில் வெற்றி பெற்றதுடன் 26 வயதில் எம்எல்ஏவாக சட்டமன்றத்துக்குள்ள அடி எடுத்து வைத்தார் சி. விஜயபாஸ்கர். இதைத் தொடர்ந்து, 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விராலிமலை தொகுதியில் மாறிப் போட்டியிட்ட சி. விஜயபாஸ்கர் தனது வெற்றியை பதிவு செய்தார். இதே போல, 2016 சட்டமன்ற தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு தனது 3- ஆவது வெற்றியை பதிவு செய்தார்.

3 / 5

இதே போல, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட்டு தற்போது எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இதனிடையே 2011- 2021 அதிமுக ஆட்சி காலத்தில் 2013- ஆம் ஆண்டு சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் விராலிமலை தொகுதியில் களமிறங்கிய சி. விஜயபாஸ்கர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் எம் பழனியப்பணி வீழ்த்தி 84 ஆயிரத்து 701 வாக்குகள் 50 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றியை பதிவு செய்தார்.

4 / 5

இதே போல, 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் களமிறங்கிய சி விஜயபாஸ்கர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எம் பழனியப்பனை வீழ்த்தி ஒரு லட்சத்து 2179 வாக்குகள் பெற்று தனது வெற்றியே தன தாக்கி கொண்டார். விராலிமலை தொகுதி கடந்த 2011 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதிலிருந்து அதிமுக வசனமே இருந்து வருகிறது.

5 / 5

இதனால், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சி விஜயபாஸ்கர் மீண்டும் இதே தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளார். இதனால், சி. விஜயபாஸ்கர் மீண்டும் தனது வெற்றியே உறுதி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதே வேளையில், இந்த தொகுதியில் களம் இறக்கப்படும் எதிர்க் கட்சி வேட்பாளரை பொறுத்து கள நிலவரமும், வெற்றி வாய்ப்பும் மாற வாய்ப்பு உள்ளது.

Follow Us