பிஎம் கிசான் 21வது தவணை எப்போது?.. மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!
When Will Farmers Get PM Kisan 21st Installment | பிஎம் கிசான் திட்டத்தில் இந்தியாவில் உள்ள விவசாயிகள் இதுவரை 20 தவணைகள் பணம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், பிஎம் கிசான் 21வது தவணை எப்போது வரும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மாதிரி புகைப்படம்
இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகளின் நலனை காக்கும் வகையில் பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் (PM Kisan Samman Nidhi Yojana) மூலம் அரசு பணம் வழங்கி வருகிறது. இதுவரை இந்த பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் 20 தவணையாக ரூ.2,000 செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், 21வது தவணை பணம் எப்போது செலுத்தப்படும் என்று விவசாயிகள் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் தான், பிஎம் கிசான் 21வது தவணை பணம் எப்போது விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம் என்றால் என்ன?
பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா என்பது ஏழை மற்று வறுமை கோட்டின் கீழ் உள்ள விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த நலத்திட்டமாகும். இந்த திட்டம் பிப்ரவரி 24, 2019 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதாவது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை என ஒரு வருடத்திற்கு மூன்று முறை விவசாயிகளின் வங்கி கணக்கில் இந்த பிஎம் கிசான் பணம் வரவு வைக்கப்படுகிறது.
இதையும் படிங்க : Personal Loan-ஐ மையப்படுத்தி நடைபெறும் மோசடிகள்.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?
பிஎம் கிசான் 21வது தவணையை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள்
இதுவரை 20 தவணை பிஎம் கிசான் பணத்தை மத்திய அரசு விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளது. இந்த நிலையில், 21வது தவணையை எதிர்ப்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். இது குறித்து கூறியுள்ள மத்திய வேளான் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் பிஎம் கிசான் 21வது தவணையை நவம்பர் 19, 2025 அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட உள்ளதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க : அறிமுகமானது இ ஆதார் செயலி.. இத்தனை சிறப்பு அம்சங்களா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 11 கோடி விவசாய குடும்பங்களுக்கு 20 தவணைகளாக ரூ.3.70 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த தகவலை தொடர்ந்து 21வது தவணை பிஎம் கிசான் பணத்திற்காக விவசாயிகள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.