Provident Fund : பணியில் இருந்து விலகிய பிறகு PF பணம் என்ன ஆகும்?.. வட்டி வழங்கப்படுமா?.. விதிகள் கூறுவது என்ன?
Employee Provident Fund Organization Rules | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் சில முக்கிய விதிகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஒரு ஊழியர் தனது பணியில் இருந்து விலகிய பிறகு அவரது பிஎஃப் பணம் என்ன ஆகும் அந்த பணத்திற்கு தொடர்ந்து வட்டி வழங்கப்படுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளதுதான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization). இந்த ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் ஊழியர்களுக்கு பல சிறப்பு அம்சங்களை வழங்குகிறது. குறிப்பாக ஊழியர்களின் பணி ஓய்வை கருத்தில் கொண்டு ஓய்வூதிய திட்டங்கள், ஊழியர் உயிரிழந்துவிட்டால் அவரின் குடும்பத்தினர் பயன்பெறும் வகையிலான திட்டங்கள் உள்ளிட்டவற்றை செயல்படுத்தி வருகிறது.
ஊழியர்களுக்கு அசத்தல் அம்சங்களை வழங்கும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம்
அந்த வகையில் இபிஎஃப்ஓவின் ஒரு குறிப்பிட்ட அம்சம்தான் பிஎஃப். அதாவது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் ஒவ்வொரு ஊழியரின் பெயரில் கணக்கு தொடங்கி அந்த கணக்கில் அவர்களது மாத ஊதியத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். இந்த தொகையை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், ஒருவர் பணியில் இருந்து விலகி விட்டால் அந்த பிஎஃப் பணத்திற்கு வட்டி வழங்கப்படுமா, அந்த பணம் என்ன ஆகும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பணியில் இருந்து விலகினாலும் பிஎஃப் வட்டி வழங்கப்படுமா?
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தை பொருத்தவரை ஊழியர்கள் தங்களது பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. ஒருவேளை ஊழியர்கள் தங்களது பணிக்காலம் முழுவதும் வரவு வைக்கப்படும் பணத்தை எடுக்கவில்லை என்றால் அதற்கான வட்டியும் வழங்கப்படும். ஆனால், ஒருவர் பணியில் இருந்து நிறந்தரமாக விலகிவிட்டால், அல்லது வேறு பிஎஃப் கணக்கை பயனபடுத்த தொடங்கிவிட்டாலோ அந்த கணக்கில் இருக்கும் பணத்திற்கு வட்டி வழங்கப்படுக்கொண்டே இருக்கும் என நினைக்கின்றனர். ஆனால், அது முற்றிலும் தவரானது.
அதாவது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் விதிகளின்படி, பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும் பணத்திற்கு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே வட்டி வரவு வைக்கப்படும். அதாவது ஒரு ஊழியர் பணியில் இருந்து விலகினாலோ அல்லது பிஎஃப் கணக்கை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டாலோ 36 மாதங்கள் வரை மட்டுமே அந்த கணக்கில் வட்டி வழங்கப்படும். அதற்குள்ளாக ஊறுப்பினர் வேறு வேலையில் சேர்ந்தால் அந்த கணக்கை இணைத்து தொடர்ந்து வட்டியை பெறலாம். அவ்வாறு 36 மாதங்களுக்குள்ளாக புதிய வேலையில் சேரவில்லை என்றாலோ அல்லது புதிய கணக்குடன் இணைக்கவில்லை என்றாலோ எந்த விதமான வட்டியும் வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.